திருப்பூர் : திருமுருகன் பூண்டி அருகே குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வரும் நிலையில், குழாய் உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் பயன்பாட்டுக்காக 3-வது கூட்டு குடிநீர் திட்டம் மூலம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ராட்சத குழாய்கள் அமைத்து குடிநீர் கொண்டு வரப்படுகிறது. தற்போது, கோடைக்காலம் என்பதால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், திருப்பூர், அவிநாசி அருகே உள்ள திருமுருகன் பூண்டி பகுதியில் ராட்சத குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. ஆனால், இதுவரை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் இந்த உடைப்பை சரிசெய்யவில்லை. இதனால், குடிநீர் சாக்கடையில் விழுந்து வீணாகி வருகிறது. அப்பகுதி மக்கள் குடங்களைக் கொண்டு வந்து தண்ணீர் பிடித்துச் செல்கின்றனர்.

மேலும், பலர் கேன்களை கொண்டு வந்து வீணாகி செல்லும் நீரை பிடித்து சென்ற வண்ணம் உள்ளனர். குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள இந்த சமயத்தில் குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்யாமல் அலட்சியம் காட்டுவது அதிகாரிகளின் மெத்தனப் போக்கையே காட்டுகிறது.