கோவை - அவிநாசி சாலையில் முட்புதரில் திடீரென பிடித்த தீ : தீயணைப்புத் துறையினர் முயற்சியால் தீயணைப்பு

கோவை : கோவை - அவினாசி சாலையில் உள்ள நவஇந்தியா அருகே சாலையோரம் இருந்த முட்புதர்களில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை : கோவை - அவினாசி சாலையில் உள்ள நவஇந்தியா அருகே சாலையோரம் இருந்த முட்புதர்களில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.



கோவையில் சாலை ஓரங்களில் உள்ள முட்புதர்களில் திடீர் திடீரென தீப்பிடிப்பது வாடிக்கையாக உள்ளது. கடந்த ஆண்டு உடையாம்பாளையம் அருகே உள்ள முட்புதரில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில், தீயானது அருகே உள்ள பள்ளி வரை சென்றது. பின்னர், தீயணைப்பு துறையினரின் முயற்சியால் இந்த தீ அணைக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று அவினாசி சாலை நவஇந்தியா பகுதியில் ஆர்.ஆர். லேண்ட்மார்க் என்ற நிறுவனத்திற்கு அருகில் காய்ந்த கருவேல முட்புதர்களில் திடீரென தீப்பற்றியது. இதையடுத்து, அருகில் இருந்த பணியாளர்கள் நீரை ஊற்றி தீயை அணைக்க முற்பட்டனர். ஆனால், காய்ந்த சருகுகள் புல்வெளியில் இருந்ததால் தீ மளமளவென பரவியது.



இதையடுத்து, தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும், இந்தப் பகுதியில் தீ பிடித்தது தொடர்பாக போலீசாரும், தீயணைப்பு துறையினரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...