கோவை : மேட்டுப்பாளையம் வனபத்திரகாளியம்மன் கோவில் ஆடி குண்டம் திருவிழாவை ஒட்டி நிகழ்ச்சியில் பிரபல நாட்டுப்புற பாடகர்கள் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி பங்கேற்க இருந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்து அமைப்பினர், போஸ்டர்களை கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் புகழ்பெற்ற வன பத்திரகாளியம்மன் கோவில் ஆடி குண்டம் திருவிழா நாளை காலை விகுவிமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, இன்று இரவு முதலே பக்தர்கள் குண்டம் இறங்க வரிசையில் நிற்பது வழக்கம். அத்துடன் விழாவைக் காண ஏராளமான கூட்டம் அதிக அளவில் கூடும் என்பதால், பக்தர்களை மகிழ்விக்கும் நோக்கத்தில் இசை மற்றும் நாட்டுப்புற பாட்டுக் கச்சேரி கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாட்டில் செய்யப்பட்டுள்ளது. இதில், பிரபல நாட்டுப்புற பாடகர் ஜோடியான செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி ஜோடி பாட உள்ளது.
இந்த நிலையில், இந்த ஜோடி கோவிலில் பாடுவதாக மேட்டுப்பாளையம் முழுவதும் போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளது. இந்த ஜோடி இந்து அமைப்புகளையும், பிரதமரையும் விமர்சித்து பாடல்கள் பாடியதாக குற்றம்சாட்டியுள்ள இந்து அமைப்புகள், இந்த ஜோடி கோவிலில் பாடுவதற்கு கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

மேலும், சுவர்களில் ஒட்டியுள்ள விளம்பர போஸ்டர்களையும் கிழித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்து அமைப்புகளுக்கும், பிரதமர் மோடிக்கும் எதிராக கருத்துக்களை தெரிவித்து வருவதுடன், கம்யூனிச சித்தாத்தங்களை கொண்டுள்ள இந்த ஜோடி கோவிலில் பாடக் கூடாது எனவும், அதையும் மீறி பாடினால் மேடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அவர்கள் எச்சரித்துள்ளனர். இதனால், ஆடி குண்டம் திருவிழாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.