கோவை மாநகரில் சந்தன மரங்கள் கடத்தப்பட்ட விவகாரம் : இருவர் கைது, எஞ்சியவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

கோவை : கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சந்தன மரக்கடத்தல் மற்றும் கடத்தல் முயற்சிகளில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்களில் இருவரைக் குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை : கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சந்தன மரக்கடத்தல் மற்றும் கடத்தல் முயற்சிகளில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்களில் இருவரைக் குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள முருகன் பஞ்சாலை குடியிருப்பு வளாகத்தில் 3 சந்தன மரங்களை மர்ம நபர்கள் இருவர் ரம்பம், கத்தி போன்ற ஆயுதங்களால் வெட்டி கடத்தியுள்ளனர். பின்னர், தடாகம் சாலை பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, காவல்துறை கட்டுப்பாட்டைத் தாண்டி அதிவேகமாக காரை ஓட்டி சென்று வடவள்ளி அருகே நிறுத்திவிட்டு தப்பி ஓடினர். தொடர்ந்து, வந்த காவல்துறையினர் காரை சோதனை செய்தபோது, சந்தன மரங்கள் மற்றும் அதனை வெட்டப் பயன்படுத்திய அரிவாள், கத்தி, ரம்பம் ஆகியவை இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அதேபோல, ராம் நகர் அருகேயும் சந்தன மரங்கள் வெட்ட முயன்ற மர்மநபர்கள் காவலரின் சத்தத்தைக் கேட்டு தப்பியோடியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக பந்தய சாலை பகுதியிலும் சந்தன மரம் வெட்டி கடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, சந்தன மரக் கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் பிடிக்க மாநகர குற்றப்பிரிவு காவல் துணை ஆணையாளர் பெருமாளின் உத்தரவின் பேரில், குற்றப்பிரிவு உதவி ஆணையாளர் சோமசேகரின் தலைமையில் ஆய்வாளர்கள் சுஜாதா மற்றும் முத்துமணி ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் வாழப்பாடி புழுதிக் குட்டையைச் சேர்ந்த கோவிந்தராஜ் மற்றும் வல்லரசு ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர். மேலும், இந்த சந்தன மர கடத்தலுக்கு முக்கிய மூளையாக செயல்படும் மீதமுள்ள நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

கோவை மாநகரில் சந்தன மரக்கடத்தல் விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வந்த சூழலில், போலீசாரின் முயற்சியால் தற்போது குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...