கோவை : சிங்காநல்லூர் குளம் பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டதையடுத்து அக்குளத்தில் விநாயகர் சிலைகளை கரைப்பது இல்லை என முடிவெடுக்கப்பட்டிருந்த சூழலில், தற்போது விநாயகர் சிலைகளை கரைப்பது தொடர்பான ஆய்வுகள் மேற்கொண்டு இருப்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சிங்காநல்லூர் குளம் தமிழகத்தின் முதல் நகர்ப்புற பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது நகர்புறத்தில் இருந்தாலும் மாசுபாடுகள் குறைந்து, சூழல் பாதுகாப்பில் முன்னிலையில் இருக்கிறது. அதனை மேலும் சிறப்பாக்க மாநகராட்சியும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் முயன்று வருகின்றனர். இப்படி நகர்ப்புற பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக இருக்கும் சிங்காநல்லூர் குளத்தை மாசுபடுத்தாமல் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற முயற்சியில் கடந்த ஆண்டு பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டது.
குறிப்பாக, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிங்காநல்லூரை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கரைக்க கொண்டு வரப்படும் விநாயகர் சிலைகளை, குளத்தின் பல்லுயிர் பாதுகாப்பு தன்மையை உணர்ந்து, சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கோரிக்கைக்கிணங்க வேறு குளத்தில் கரைக்க கடந்த ஆண்டே வாய்மொழியாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதற்கு மாநகர காவல்துறையும், மாநகராட்சி நிர்வாகமும் ஒத்துழைத்தது.
இந்த சூழலில், இன்று காலை சிங்காநல்லூர் குளத்தில் இரண்டு காவல் உதவி ஆணையாளர்கள் தலைமையில், மாநகராட்சி அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர் அடங்கிய குழுவினர் இன்று விநாயகர் சிலைகளை கரைப்பது தொடர்பான கள ஆய்வு மேற்கொண்டது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை காரணம் காட்டி குளத்தின் பாதுகாப்புத் தன்மை கெட்டுவிட காவல்துறையினர் ஒருபோதும் துணை போகக் கூடாது என கோரிக்கை வைத்துள்ளனர்.