அங்கன்வாடி மையம் புதிய இடத்தில் செயல்பட உடனடி அனுமதி வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை : மேட்டுப்பாளையம் பகுதி காரமடை பஞ்சாயத்து எம்.ஜி.ஆர். நகரில் செயல்பட்டு வரும் அங்கன்வாடியை புதிய இடத்தில் செயல்பட மாவட்ட ஆட்சியர் அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் மனு அளித்தனர்.

கோவை : மேட்டுப்பாளையம் பகுதி காரமடை பஞ்சாயத்து எம்.ஜி.ஆர். நகரில் செயல்பட்டு வரும் அங்கன்வாடியை புதிய இடத்தில் செயல்பட மாவட்ட ஆட்சியர் அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் மனு அளித்தனர்.



இது குறித்து அவர்கள் கூறியதாவது :- எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் கடந்த 2012-ம் ஆண்டு சுய உதவி குழுக்கள் மூலம் தனியார் இடத்தில் அங்கன்வாடி செயல்பட துவங்கியது. அப்போது, இந்த அங்கன்வாடியில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்த நிலையில், செங்குத்தாக உள்ள பாதை வழியாக குழந்தைகள் வந்து செல்கின்றனர். போதிய சாலை வசதி இல்லாத காரணத்தாலும், சுகாதாரமற்ற நிலை தற்போது அங்கு நிலவி வருவதால், குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது. இப்பகுதியில், அதிக அளவில் குழந்தைகளை அங்கன்வாடியில் சேர்க்க பெற்றோர்கள் விரும்புகின்றனர். தற்போது, 20 குழந்தைகள் வரை உள்ள நிலையில், இதனை அதே பகுதியில் மாற்று இடத்தில் செயல்பட உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு அனுமதி அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து உள்ளோம், என தெரிவித்தனர்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...