கோவையில் ரயில்வே துறைக்கு சொந்தமான நாய்களுக்கான தேசிய அளவிலான போட்டி : பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நாய்கள் பங்கேற்பு

கோவை : கோவையில் ரயில்வே துறையில் பயன்படுத்தும் நாய்களுக்கு இடையேயான தேசிய அளவிலான போட்டிகளில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நாய்கள் பங்கேற்றுள்ளன.


கோவை : கோவையில் ரயில்வே துறையில் பயன்படுத்தும் நாய்களுக்கு இடையேயான தேசிய அளவிலான போட்டிகளில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நாய்கள் பங்கேற்றுள்ளன.



கோவை போத்தனூர் பகுதியில் உள்ள ரயில்வே பாதுகாப்பு படை நாய்கள் பயிற்சி மையத்தில், தேசிய அளவிலான போட்டிகள் நடைபெற்று வருகிறது. ரயில்வே துறையில் பயன்படுத்தும் நாய்களுக்கு இடையேயான இப்போட்டிகளில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நாய்கள் பங்கேற்றுள்ளன. தென்னக ரயில்வே துறை சார்பில் நடத்தப்படும் இந்த போட்டிகள் இன்றும், நாளையும் என இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதில், ஜெர்மன் ஷெப்பேர்டு, லேப்ராடர் ரெட்ரீவர், டாபர்மேன் ஆகிய 3 வகைகளைச் சேர்ந்த 41 நாய்கள் பங்கேற்றுள்ளன. 



மோப்பத் திறன், கட்டளைகளுக்கு கீழ்படிதல், ஒழுக்கமாக செயல்படுதல், பொருட்களை தேடி எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படுகின்றன.



இப்போட்டிகளில் இருந்து சிறந்த நாய்கள் அகில இந்திய அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படுமென அதிகாரிகள் தெரிவித்தனர். போதைப்பொருட்கள் கடத்தலைத் தடுக்க இந்த நாய்களைப் பயன்படுத்த உள்ளதாகவும், அதற்காக போத்தனூரில் 60 அறைகள் கொண்ட நாய்கள் தங்குமிடம் இந்தாண்டு இறுதிக்குள் உருவாக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுமெனவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும், ரயில்வே துறையில் பெல்ஜியன் மெலினாய்ஸ் வகை நாய்கள் விரைவில் இணைக்கப்பட உள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...