ரேப்பிடோ இருசக்கர வாகன சேவைக்கு அனுமதி வழங்கக்கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை : ரேப்பிடோ வாகனத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் அதன் ஓட்டுநர் இன்று மனு அளித்தனர்.

கோவை : ரேப்பிடோ வாகனத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் அதன் ஓட்டுநர் இன்று மனு அளித்தனர். 

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் ரேப்பிடோ இருசக்கர வாகனம் இயங்கி வருகிறது. உரிய அனுமதியின்றி செயல்பட்டு வரும் இதனை அனுமதிக்கக் கூடாது என கால் டேக்சி ஓட்டுநர்கள் மற்றும் டூரிஸ்ட் ஆப்பரேட்டர்கள் புகார் அளித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் சோதனை மேற்கொண்டு, இவ்வாறு செயல்படும் வாகனங்களை மீது அபராதம் விதித்து வருகின்றனர்.



இந்த நிலையில், இருசக்கர வாடகை வாகனங்களை இயக்க தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி கோவையில் ரேப்பிடோ வாகன ஓட்டிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

இது குறித்து அவர்கள் கூறியதாவது :- தமிழகத்தில் 25.000-க்கும் மேற்பட்டோர் ரேப்பிடோ வாகன ஓட்டிகளாக உள்ளனர். கோவை மாவட்டத்தில் 2,000 பேர் உள்ளனர். பெங்களூரூவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தின் செயலியை, சமூக வலைதளம் மற்றும் விளம்பரங்கள் மூலம் ஏராளமானோர் பதிவிறக்கம் செய்து இருசக்கர வாடகை வாகனமாக இயக்கி வருகின்றனர். தற்போது, வாகனங்கள் பறிமுதல், அபராதத் தொகை என பல்வேறு பிரச்சனைகள் காரணமாக வேலை இன்றி தவித்து வருகிறோம். மேலும், இதில் பகுதி நேர பணியாளர்கள், பட்டதாரிகள் என பலர் பணியாற்றி வருகின்றனர். இதன் மூலம், வேலை வாய்ப்பு கிடைக்க பெற்று வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் உள்ளதால், இந்த ரேப்பிடோ இருசக்கர வாகனங்களை இயக்கி வருகின்றனர். மோட்டர் வாகன சட்டத்தின் கீழ் ரேப்பிடோ இருசக்கர வாகனங்களை இயக்க அனுமதி வழங்க வேண்டும். இது தொடர்பாக தமிழக முதலமைச்சருக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் மனு அளிக்கப்பட்டு உள்ளனர்," என தெரிவித்தனர்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...