பேருந்து நிறுத்தங்களை மாற்றி அமைத்தல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கொ.ம.தே.க.வினர் மனு

கோவை : பேருந்து நிறுத்தங்களை மாற்றி அமைப்பது, முக்கிய பகுதிகளில் காவலர்களை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

கோவை : பேருந்து நிறுத்தங்களை மாற்றி அமைப்பது, முக்கிய பகுதிகளில் காவலர்களை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.



கோவை கிழக்கு மாநகர கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது :- மாநகரின் பிரதான சாலைகளான அவினாசி சாலை, திருச்சி சாலை, மேட்டுபாளையம், பொள்ளாச்சி, சத்தி சாலைகளில் சிக்னலுக்கு அருகில் உள்ள பேருந்து நிறுத்துமிடங்களை மாற்றி அமைக்க வேண்டும், மக்கள் அதிகம் நடமாடும் சுங்கம், சுந்தராபுரம், ஈச்சனாரி, சரவணம்பட்டி, கணபதி உள்ளிட்ட பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இதனை சரி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தது. 

பின்னர் இது குறித்து அக்கட்சியின் கிழக்கு மாநகர செயலாளர் தனபால் கூறுகையில், "தற்போது கணபதி முதல் சரவணம்பட்டி வரை அதிக அளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், இந்த பகுதிகளில் உயர்மட்ட மேம்பாலம், சர்வீஸ் சாலைகள், பார்க்கிங்கை முறைபடுத்த வேண்டும். குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும். பீளமேடு, சித்ரா ஆகிய பகுதிகளில் போக்குவரத்து காவலர்களை அதிகம் நியமிக்க வேண்டும். பொதுமக்கள் இன்னலின்றி பயணிக்க நடை மேம்பாலங்கள் உடனடியாக அமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து உள்ளோம்," என தெரிவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...