பறை இசை நிகழ்ச்சியுடன் நிறைவு பெற்றது கோவை புத்தகத் திருவிழா : 'ஒரு சாகச பயணியின் கதை' எனும் நூல் வெளியீடு

கோவை : கொடிசியாவில் 10 நாட்கள் நடைபெற்ற கோவை புத்தகத் திருவிழாவின் இறுதி நாளில் 'ஒரு சாகச பயணியின் கதை' எனும் நூல் வெளியிடப்பட்டது.

கோவை : கொடிசியாவில் 10 நாட்கள் நடைபெற்ற கோவை புத்தகத் திருவிழாவின் இறுதி நாளில் 'ஒரு சாகச பயணியின் கதை' எனும் நூல் வெளியிடப்பட்டது.



கொடிசியா நடத்தும் கோவை புத்தகத் திருவிழாவின் நிறைவு நாளான நேற்று சொல்முகம் வாசகர் குழுமத்தின் வாசகர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, குர்அதுல் ஐன் ஹைதர் எழுதிய அக்னிநதி நாவலின் மீதான கலந்துரையாடல் நடைபெற்றது. 30க்கும் மேற்பட்ட வாசகர்கள் நாவல் குறித்த தங்களது கருத்துக்களைப் பல்வேறு கோணங்களில் வெளிப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து, நிகர் பறையிசை குழுவினருடைய பறை இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 25 கலைஞர்கள் பறை இசைக் கருவியை இசைத்தபடி ஒயிலாக நடனமாடியது பார்வையாளர்களை பெரிதும் ஈர்த்தது. பின்னர், 'ஒரு சாகச பயணியின் கதை' எனும் நூல் அரங்கில் வெளியிடப்பட்டது.



இறுதியாக நடைபெற்ற நிறைவு விழாவில் பபாசி தலைவர் வைரவன், இலக்கியக் கூடல் அமைப்பின் தலைவர் பாலசுந்தரம், கொடிசியா புத்தகத் திருவிழா தலைவர் விஜய் ஆனந்த், துணை தலைவர் ரமேஷ், புத்தகத் திருவிழா குழுவின் ஆலோசகர் வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். சிறப்பான ஏற்பாடுகளுக்கு நன்றி தெரிவித்த பைரவன் இந்த முறை புத்தகங்கள் உடைய விற்பனை எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்தது என்று தெரிவித்தார். நிகழ்வில் அடுத்த ஆண்டு புத்தகத் திருவிழாவிற்கான தேதி அறிவிக்கப்பட்டது. ஆர்வமுடன் இந்தப் புத்தகத் திருவிழாவில் பங்கேற்ற பதிப்பகங்களையும், புத்தக விற்பனையாளர்களையும், வாசகர்களையும், எழுத்தாளர்களையும், புத்தக திருவிழாவிற்கு உதவி செய்த ஸ்பான்சர்களையும், இன்னபிற அமைப்பினரையும் புத்தக திருவிழாவில் தலைவர் நன்றி பாராட்டினார்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...