கோவை : பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய 6 மாத சம்பள பணத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனம் நாடு முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இதில், லட்ச கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும், ஒப்பந்த ஊழியர்கள் பலர் பணியாற்றி வரும் நிலையில், கடந்த ஆறு மாதங்களாக தங்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை எனவும், இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஊர்வலமாக வந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்பந்த பணியாளர்கள் மனு அளித்தனர்.

பின்னர் இது குறித்து அவர்கள் கூறுகையில், "தமிழகம் முழுவதும் 7,000-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கோவை மாவட்டத்தில் 442 பேர் பணியாற்றி வருகின்றனர். பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு அதிக அளவில் சம்பளம் வழங்கப்படுகிறது. தங்களுக்கு ரூ. 7,000 முதல் ரூ.10,000 வரை தான் சம்பளம் வழங்கப்படுகிறது. ஒப்பந்ததாரர் மூலம் வழங்கப்பட்டு வந்த சம்பளம் கடந்த ஆறு மாதமாக தங்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதால், உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து உள்ளோம். பி.எஸ்.என்.எல். நிறுவனம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் தொழிற்சங்கங்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்," எனக் கூறினார்.