திருப்பூர் : திருப்பூரில் கிணற்றில் குளிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் ஜீவா காலனி நகரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரின் மகன் ராஜா முத்துக்குமார். இவர் இன்று தனது நண்பர்களுடன் திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் உள்ள தனலட்சுமி மில் என்ற பகுதியில் மக்கள் பயன்பாட்டில் இல்லாத கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். இந்த நிலையில், நீச்சல் தெரியாத நண்பர்கள் தண்ணீரில் இறங்காமல் மேலே நின்றிருக்க, ராஜா முத்துக்குமார் மட்டும் தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக, தண்ணீருக்குள் சென்ற ராஜா முத்துக்குமார் அதிக நேரம் வெளிவராத நிலையில், பயந்துபோன அவரது நண்பர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்

அதன்பேரில், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் வடக்கு தீயணைப்புத் துறையினர் நீரில் மூழ்கி உயிரிழந்த ராஜா முத்துக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து திருப்பூர் வடக்கு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.