வெள்ளலூர் குளத்தில் 128-வது வார களப்பணியாற்றிய குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர்

கோவை : வெள்ளலூர் குளத்தில் 128-வது வார களப்பணி குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் சார்பில் மேற்கொள்ளப்பட்டது.

கோவை : வெள்ளலூர் குளத்தில் 128-வது வார களப்பணி குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் சார்பில் மேற்கொள்ளப்பட்டது.



கோவை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை சீரமைத்தல் மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகளை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு வாரந்தோறும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்த வாரம் (ஜுலை 28) இன்று வெள்ளலூர் குளத்தில் களப்பணி மேற்கொள்ளப்பட்டது. 120 தன்னார்வலர்கள்பராமரிப்பு மற்றும் மரக்கன்றுகள் நடும் பணி இருந்தமையால் பணிகளை மூன்று குழுவாக பிரித்துக்கொண்டு களமிறங்கினர். 



ஒரு குழு மூன்றாவது மியாவாக்கி அடர்வனத்தில் உள்ள களை எடுத்து காய்ந்த இலை குப்பைகளை கொண்டு மூடாக்கிடும் பணி மேற்கொண்டனர். வருமான வரித்துறையினர் தொடங்கி வைத்த 159 மரக்கன்றுகள் நடும் பணி இன்று பராமரிக்க வேலியிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டு முடிந்தது. மேலும், பேங்க் ஆப் பரோடா உதவியுடன் 72 மரக்கன்றுகள் நடும் பணியும் தன்னார்வலர்களால் இன்று செய்து முடிக்கப்பட்டது. சில தன்னார்வலர்கள் இணைந்து உரக் குழி எடுத்து சந்தையிலிருந்து கொண்டு வரப்பட்ட காய்கறி கழிவுகளை கொட்டி உர தயாரிக்கும் பணி செய்தனர். 



அடுத்த வாரமும் களப்பணி வெள்ளலூர் குளத்தில் செய்வது என முடிவு செய்யப்பட்டு களப்பணி முடிவுபெற்றது.



Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...