டெல்லி : கோவையிலிருந்து வெளிநாடுகளுக்கு விமானச் சேவை மேலும் அதிகரிக்கப்படும் என எம்.பி. ஆ. ராசாவின் கோரிக்கைக்கு மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பதிலளித்தார்.

கோவையிலிருந்து துபாய், கோலாலம்பூர் மற்றும் பாங்காக் போன்ற நகரங்களுக்கு விமானப் போக்குவரத்து வசதி செய்யக்கோரி கடந்த மாதம் மக்களவையில் கேள்வி நேரத்தின்போது எம்.பி. ஆ. ராசா, மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரியிடம் வலியுறுத்தி பேசினார். அப்போது, தொழில் நகரமான கோவையிலிருந்து வெளிநாடுகளுக்கு விமானச் சேவை மிகவும் குறைவாகவே இயக்கப்படுவது குறித்தும், விமானச் சேவைகளை அதிகரிக்க கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டும் அது குறித்து விமானப் போக்குவரத்துத்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கேள்வியெழுப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சரை கடந்த மாதம் 28-ம் தேதி ஆ.ராசா நேரில் சந்தித்து இது குறித்து கோரிக்கை மனுவும் அளித்தார்.
இதற்கு மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி, கடந்த 22-ம் தேதி ஆ. ராசாவுக்கு இது குறித்து பதில் அனுப்பியுள்ளார் அதில், தற்போது கோவையிலிருந்து சிங்கப்பூர், சார்ஜா மற்றும் இலங்கைக்கு விமானச் சேவைகளை முறையே ஏர் இந்தியா, சில்க் ஏர் மற்றும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் இயக்கி வருவதாகவும், வெளிநாட்டு விமான நிறுவனங்கள் தற்போது உள்ள நடைமுறையில் உடனடியாக விமானச் சேவைகளை கோவையில் தொடங்க இயலாது எனவும், இருப்பினும் இந்திய விமான நிறுவனங்கள் கோவையிலிருந்து வெளிநாடுகளுக்கு விமானச் சேவைகளை அதிகரிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள கடந்த 10-ம் தேதி நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் விமானப் போக்குவரத்துத்துறை செயலாளர் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேற்கண்ட நடவடிக்கை மூலம் இந்திய விமான நிறுவனங்கள் கோவையிருந்து வெளிநாடுகளுக்கு விரைவில் தங்களது விமானச் சேவைகளை தொடங்கிட வழிவகை செய்யப்படும் எனவும் உறுதியளித்தார்.