வனபத்திரகாளியம்மன் கோவில் ஆடி குண்டம் திருவிழா நிகழ்ச்சி இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்

கோவை : மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றங்கரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற வனபத்திரகாளியம்மன் கோவில் ஆடி குண்டம் திருவிழாவையொட்டி இன்று கொடியேற்ற நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெற்றது.

கோவை : மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றங்கரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற வனபத்திரகாளியம்மன் கோவில் ஆடி குண்டம் திருவிழாவையொட்டி இன்று கொடியேற்ற நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெற்றது.



தேக்கம்பட்டி கிராம பொதுமக்கள் சார்பில் மூங்கில் மரத்தில் சிம்மவாகணம் பொறித்த கொடி எடுத்து வரப்பட்டு பவானி ஆற்றங்கரையில் அமைந்துள்ள முத்தமிழ் விநாயர் ஆலயத்தில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யபட்டது. இதனை தொடர்ந்து, மேள தாளங்கள் முழங்க கிராம மக்கள் அம்மனுக்கு பூமாலை, பழம், பட்டாடை ஆகிய சீர் வரிசையுடன் திருக்கொடியை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர், கோவிலை சுற்றி வலம் வந்து கொடி மரம் முன்பு வைக்கப்பட்டு சிவாச்சாரியர்கள் கொண்டு வேதமந்திரங்கள் மூலம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 



பின்னர், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டு அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனைத் தொடர்ந்து, பக்தர்களின் ஓம் சக்தி பராசக்தி கோசங்கள் முழங்க சிம்மவாகன கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான பூ குண்டம் இறங்கும் நிகழ்ச்சி வரும் 30ஆம் தேதி நடைபெற உள்ளது குறிபிடத்தக்கது.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...