டெல்லி : உயர் மின்னழுத்த கோபுரம் நிறுவும் திட்டத்திற்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற தமிழக விவசாயிகளின் போராட்டத்திற்கு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் நேரில் ஆதரவு அளித்தார்.

உயர் மின்னழுத்த கோபுரம் நிறுவும் திட்டத்திற்கு எதிராக டெல்லியில் ஆல் இந்தியா கிசன் சபாவுடன் இணைந்து தமிழ்நாடு விவசாயிகள் கடந்த வாரம் இரு தினங்களாக போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் ஆதரவு அளிக்கும் வகையில் கோவை மக்களவை எம்.பி., பி.ஆர். நடராஜன் கலந்து கொண்டார். அங்கு விவசாயிகளுக்கு மத்தியில் அவர் பேசியதாவது :- விவசாய நிலங்களில் உயர்கோபுரங்கள் அமைக்கும் விவகாரத்தில் தமிழக அரசு இருநிலைப்பாடாக செயல்பட்டு வருகிறது. டெல்லிக்கு வந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாற்று வழியில் உயர் கோபுரங்கள் அமைப்பது தொடர்பாக ஆலோசித்து வருவதாக கூறினார். ஆனால், சட்டசபையில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினிடம், விளைநிலங்கள் வழியாக அமைப்பதை தவிர்த்து வேறு வழியில்லை என்கிறார். இதற்கு காரணம், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திடம் பேசி முடித்த கமிஷனே ஆகும், எனக் கூறினார்.
மேலும், ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள பழைய உயர்மின் கோபுரங்களுக்கு வழங்கப்படும் வாடகை தொகையை புதியதாக பொருத்தவிருக்கும் உயர்மின் கோபுரங்களுக்கான வாடகையாக வழங்க வேண்டும் என்றும், அதி நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வயர்களுக்கு பதிலாக கேபிள்களை பயன்படுத்த வேண்டும் என அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்தார்.