கோவை : நாடாளுமன்றம் மற்றும் சட்டம் இயற்றும் அமைப்புகளில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை நிறைவேற்ற வலியுறுத்தி எல்.ஐ.சி. உழைக்கும் பெண்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவைப் பகுதி எல்.ஐ.சி. உழைக்கும் பெண்கள் அமைப்பின் 32-வது மாநாடு கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது. இதில், பொதுத்துறை, பொதுக்காப்பீட்டு நிறுவனங்கள் பொதுத்துறையிலேயே பாதுகாத்திட மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், சட்டமியற்றும் அமைப்புகளில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு, அரசுப்பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும், தனியார் பள்ளி, கல்லூரிகளின் கட்டண கொள்ளையை தடுக்க வேண்டும், அனைத்து பெரு நகரங்களிலும் உழைக்கும் மகளிர் தங்கும் விடுதி மற்றும் குழந்தைகள் காப்பகம் அமைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், அதிகரித்து வரும் பாலின கொடுமைகளைத் தடுத்திட பாலின நிகர்நிலை சமத்துவ கல்வியினை பாடத்திட்டத்தில் இணைக்க வேண்டும், கல்வி நிலையங்களில் புகார் கமிட்டி அமைத்திட வேண்டும், சாதி ஆணவக்கொலை என்கிற பெயரில் காதல் திருமணம் செய்தவர்களைப் படுகொலை செய்வதை கண்டித்தும், பெண்களை ஓட்டுநர்களாகக் கொண்டு செயல்படும் பிங்க் டேக்ஸியின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, தேசிய மூத்தோர் தடகள வீராங்கனை டாக்டர் ஜெயா மகேஷ் கௌரவிக்கப்பட்டார்.