கோவை : வாடிக்கையாளர்களின் சேவை கட்டணத்தை உயர்த்துவதைக் கண்டித்து இந்திய வங்கி ஊழியர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் சார்பில் வங்கிகள் தேசிய மயத்தின் பொன்விழா ஆண்டு கருத்தரங்கம் மற்றும் கோவை மாவட்ட 5-வது மாநாடு காந்திபுரத்தில் உள்ள தனியார் கூட்டரங்கில் மாவட்ட தலைவர் சேதுராமன் தலைமையில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தமிழக பொதுச்செயலாளர்கள் சி.பி.கிருஷ்ணன் மற்றும் மத்தியக் குழு உறுப்பினர் என்.சுப்பிரமணியம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதனைத்தொடர்ந்து, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதாவது, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு கைவிட வேண்டும், மக்கள் சேமிப்பை கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிப்பதை தடுக்க பொதுத்துறை வங்கிகளைப் பாதுகாக்க வேண்டும், இந்திய நாட்டின் மாணவர்களின் சமநிலையை குலைக்கும் புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும், வங்கி ஊழியர்களுக்கான 11-வது இருதரப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும், வாடிக்கையாளர்களுக்கு சேவை கட்டணத்தை உயர்த்தக்கூடாது, தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், கோவையின் குடிநீரை தனியார் சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கும் அபாயமான முடிவை கோவை மாநகராட்சி கைவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், வங்கி ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவராக கணேசன், பொதுச்செயலாளராக ஆர்.மகேஷ்வரன், பொருளாளர் தனபால் மற்றும் கோபாலகிருஷ்ணன், ஜெயசந்திரன், சிந்து, சிவலிங்கம் உள்ளிட்ட 30 பேர் கொண்ட மாவட்ட நிர்வாகக்குழு மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநாட்டில் ஏராளமான வங்கி ஊழியர்கள் பங்கேற்றனர்.