கோவை : பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக முகநூலில் கருத்து பதிவு செய்த திராவிடர் விடுதலை கழக கோவை மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு ஆகஸ்ட் 9-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாட்டுக்கறி சூப் சாப்பிடுவதை முகநூலில் பதிவிட்ட இளைஞர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, திராவிடர் விடுதலைக் கழகத்தின் கோவை மாவட்ட செயலாளர் நிர்மல் குமார் தனது முகநூலில் 'தில் இருந்தால் வா' என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தை குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மணி என்பவர் கொடுத்த புகாரின் பேரில், காட்டூர் போலீசார் இன்று நிர்மல் குமாரை கைது செய்தனர். இதில், நிர்மல் குமார் மீது இந்திய தண்டனை சட்டம் 505 (2) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து, கோவை பந்தய சாலையில் உள்ள நீதிபதி குடியிருப்பில் குற்றவியல் நீதிபதி பிரபு முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது, நிர்மல் குமாரை வரும் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.