கோவையில் 2-வது தேசிய ஜவுளி மாநாடு : ஜவுளித்தொழிலில் ஜப்பானிய 5 எஸ் ஒழுங்குமுறை பயன்படுத்துவது குறித்து விளக்கம்

கோவை : இந்திய தரவட்ட மன்றம் (QCFI) மற்றும் இந்திய டெக்ஸ்பிரனர்ஸ் கூட்டமைப்பு இணைந்து ஜவுளித்தொழிலில் ஜப்பானிய 5 எஸ் ஒழுங்குமுறை பயன்படுத்துவது குறித்து *கோவையில் நடந்த தேசிய ஜவுளி மாநாட்டில் விளக்கப்பட்டது.

கோவை : இந்திய தரவட்ட மன்றம் (QCFI) மற்றும் இந்திய டெக்ஸ்பிரனர்ஸ் கூட்டமைப்பு இணைந்து ஜவுளித்தொழிலில் ஜப்பானிய 5 எஸ் ஒழுங்குமுறை பயன்படுத்துவது குறித்து *கோவையில் நடந்த தேசிய ஜவுளி மாநாட்டில் விளக்கப்பட்டது. 

இந்திய தரவட்ட மன்றம் (QCFI) மற்றும் இந்திய டெக்ஸ்பிரனர்ஸ் கூட்டமைப்பு இணைந்து கோவை தாஜ் விவாந்தா ஓட்டலில் ‘தேசிய ஜவுளி மாநாடு’ இரண்டாவது பதிப்பை நடத்தியது. ஜவுளி தொழிற்சாலை, தொழிலாளர்களிடையே 5 எஸ் மற்றும் தர வட்ட கொள்கையை மேம்படுத்தும் நோக்கமாக இந்த மாநாடு நடத்தப்பட்டது. மாநாட்டினை இந்திய டெக்ஸ்பிரனர்ஸ் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன், இந்திய தர வட்ட மன்றத்தின் செயல் இயக்குனர் டி.கே.ஸ்ரீவத்ஸா மற்றும் கோவை கிளையின் தலைவர் டாக்டர் மோகனசுந்தரி ஆகியோர் துவக்கி வைத்தனர். துவக்க விழாவில் ஐ.டி.எப்.சி. பவுண்டேஷன் தலைமை செயல் அதிகாரி டாக்டர் என்.எஸ்.ராஜன், ‘மகிழ்ச்சியே வெற்றியின் திறவு கோல்’ என்ற தலைப்பில் பேசினார்.

மாநாட்டில் பல்வேறு ஜவுளித்தொழில் துறையைச் சேர்ந்த அணியினர், 8 தொழில்நுட்ப அமர்வுகளை நடத்தினர். சிறந்த மனிதவள மேம்பாட்டு பயிற்சிகள், நிலையான உற்பத்தி, அதிகபட்ச உற்பத்தி தொழில்நுட்பம், வீணாவதை குறைத்தல், அதிநவீன தொழில்நுட்பங்கள் போன்ற தலைப்புகளில் இந்த அமர்வுகள் நடந்தன. ஐ.டி.எப். குழு உறுப்பினர்கள், ‘5எஸ் மற்றும் தர வட்ட பயிற்சிகள்’ பற்றி கலந்துரையாடினர்.

மும்பை டப்பாவாலாக்கள் செயல்படும் விதம், சர்வதேச அளவில் அவர்கள் கடைபிடித்த 6 சிக்மா ஒழுங்குமுறைக்கு கிடைத்த விருதுகள், தொழில்நுட்பம் இல்லாமல், மனிதனே தவறின்றி கையாளும் முறை பற்றியும் மாநாட்டில் விளக்கம் தரப்பட்டன. மாநாட்டிற்கு லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் நிறுவனம், எல்.ஜி. எக்யூப்மென்ட்ஸ் ஆகியவை பிளாட்டின ஸ்பான்சராகவும், பிரீமியர் எவால்விக்ஸ், பவர்லிக்ஸ் சிஸ்டம்ஸ் போன்றவை கோல்டு ஸ்பான்சாராகவும், சில்வர் ஸ்பான்சராக வன்கார்டு பெய்லங் ஆதரவளித்தது. இந்த மாநாட்டில் 150 ஜவுளித்தொழிற்சாலைகளிலிருந்து 150 பேர் பங்கேற்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...