கோவை : கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தின் வெள்ளிவிழா நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், கட்டுமானம் மற்றும் அதன் தேவைகள் மற்றும் சங்க செயல்பாடுகள் குறித்த கையேட்டை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் நிர்வாகிகளின் பத்திரிகையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. இச்சங்கத்தின் தலைவர் உதயகுமார் மற்றும் செயலாளர் சந்திர பிரகாஷ் செய்தியாளர்களிடம் பேசினார். அவர்கள் கூறியிருப்பதாவது :- ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் கடந்த 1995-ம் ஆண்டு துவங்கப்பட்டது. 25 ஆண்டுகள் நிறைவையொட்டி நாளை அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் இந்த விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவின் போது, கட்டுமானம் மற்றும் அதன் தேவைகள் மற்றும் சங்க செயல்பாடுகள் குறித்த கையேட்டை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கதுறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட உள்ளார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் நல்லறம் அறக்கட்டளை தலைவர் அன்பரசன், ஆலயம் அறக்கட்டளை நிறுவனர் சந்திரசேகர், மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார், துணை ஆணையர் பிரசன்னா ராமசாமி மற்றும் விஜய் டிவி நீயா-நானா புகழ் கோபிநாத் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர், என்றனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்க செயலாளர் சந்திர பிரகாஷ் பேசியதாவது :-250-க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் உள்ளனர். வருடந்தோறும் 1,200 கோடி ரூபாய் வரை டெண்டர் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது, ஆன்லைன் மூலமே டெண்டர்கள் பெறப்படுகிறது. பெரிய அளவில் டெண்டர்கள் பெறும்போது நிதி வழங்கப்படுவது சற்று காலதாமதமாகிறது. தற்போது கட்டுமான தொழில்களுக்கு எம்.ஸாண்ட் அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது. பொதுப்பணித்துறை மூலம் தர சான்றிதழ்கள் அளிக்கப்பட்ட பின்னரே, கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என்றார்.
.இந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது, பொருளாளர் அம்மாசையப்பன், துணை தலைவர் ராஜகோபால், துணை செயலாளர் மைக்கேல், துணை பொருளாளர் செல்வராஜ் மற்றும் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.