கோவை : 24 மணிநேரமும் தடையில்லா குடிநீர் வழங்கும் சூயஸ் திட்டப்பணிகள் குறித்து கோவை மாநகராட்சியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் போக்குவரத்து போலீசார், மின்சார வாரியத் துறையினர், பி.எஸ்.என்.எல். ஊழியர்கள், கோவை மாநகராட்சி பொறியாளர்கள் மற்றும் சூயஸ் அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது, குழிகளைத் தோண்டி குழாய் பதிப்பதால் எதிர்கொள்ளப்படும் பிரச்சனைகளை எளிதில் எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.

இது குறித்து மாநகராட்சி மூத்த அதிகாரி கூறுகையில், "குடிநீர் குழாய்களை பதிப்பதற்காக ஆர்.எஸ்.புரம் சாலைகளில் குழிகள் தோண்டப்பட்டுள்ளன. பி.எஸ்.என்.எல். கேபிள்கள் மற்றும் மின்சார வாரியக் கேபிள்கள் என பல்வேறு கேபிள்களும், குழாய்களும் பதிக்கப்பட்டுள்ளன. அதற்கு மத்தியில் எந்தவிதமாக சேதமும், பள்ளங்கள் தோண்டும் போது ஏற்படும் குழப்பங்களையும் தவிர்க்க அனைத்து துறைகளும் ஒத்துழைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எனவே, இந்தப் பணிகளை துரிதப்படுத்தும் நோக்கில் தற்போது அனைத்து துறை அதிகாரிகளும் ஆலோசனை மேற்கொண்டனர்," என்றார்.
இதனிடையே, இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சூயஸ் திட்ட வரைபடம் அனைத்துத் துறை அதிகாரிகளிடமும் வழங்கப்பட்டது.