வீட்டுமனை அங்கீகாரம் வழங்கியதில் மோசடி : சிக்கதாசம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் ஆய்வு

கோவை : வீட்டுமனை அங்கீகாரம் வழங்கியதில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக எழுந்த புகாரினை தொடர்ந்து, மேட்டுப்பாளையம் சிக்கதாசம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்.

கோவை : வீட்டுமனை அங்கீகாரம் வழங்கியதில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக எழுந்த புகாரினை தொடர்ந்து, மேட்டுப்பாளையம் சிக்கதாசம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்.

கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் வீட்டுமனை அங்கீகாரம் வழங்கியதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், அங்கீகாரம் மட்டுமின்றி வீட்டுமனை வரி ரசீது போலியாக அச்சடிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டதுடன் ஊராட்சி நிதியினை பல்வேறு முறையில் ஊழல் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, புகார் சம்பந்தமாக மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.



இந்த நிலையில், லஞ்ச ஒழிப்பு காவல்துறை ஆய்வாளர் தலைமையில் 3 பேர் கொண்ட குழு இன்று திடீரென பஞ்சாயத்து அலுவலகத்தில் நுழைந்து கோப்புகளை ஆய்வு மேற்கொண்டது. இதில், முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படும் 2011-ம் ஆண்டு முதல் 2017 ஆண்டு வரையில் வீட்டுமனை அங்கீகாரம் வழங்கியதற்கான ஆவணங்கள் குறித்தும், போலி ரசீதுகள் குறித்தும் ஆய்வு செய்தனர். மேலும், சந்தேகத்திற்கு இடமான வகையில் உள்ள 2011 முதல் 2017 வரை உள்ள கோப்புகளைக் கைப்பற்றி லஞ்ச ஒழிப்பு போலீசார் அதனை விசாரணைக்காக கோவை அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர். 

இந்த கோப்புகளை ஆய்வு செய்த பின்னர், சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற ஊழல் புகாரில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும், ஊராட்சி நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டதா.. எவ்வளவு கையாடல் செய்யப்பட்டது என்பது பற்றி தெரிய வரும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...