மழை வேண்டி மேட்டுப்பாளையம் வனபத்திரகாளியம்மன் கோவிலில் தமிழ் முறைப்படி சிறப்பு வழிபாடு

கோவை : மேட்டுப்பாளையம் வன பத்திரகாளியம்மன் கோவிலில் மழை வேண்டி தமிழ் முறைப்படி லட்சார்ச்சனை செய்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.

கோவை : மேட்டுப்பாளையம் வன பத்திரகாளியம்மன் கோவிலில் மழை வேண்டி தமிழ் முறைப்படி லட்சார்ச்சனை செய்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான சிறுமுகை, காரமடை உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்தபடி பெய்யாததால் இப்பகுதிகளில் வறட்சி நிலவி வருகிறது. தற்போது, கேரளாவில் பருவ மழை துவங்கியபோதும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் அவ்வப்போது சாரல் மழை மட்டுமே பெய்து வரும் நிலையில், நீர்நிலைகள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகின்றன. எனவே, நல்ல மழை பெய்து நீர் நிலைகள் நிறையவும், விவசாயம் செழிக்கவும், மேட்டுப்பாளையம் வன பத்திரகாளியம்மன் கோவிலில் சிவாச்சாரியர்கள் தமிழ் முறைப்படி லட்சார்ச்சனை செய்து அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர்.



கோவில் வளாகத்தில் உள்ள முன் மண்டபத்தில் இப்பூஜைக்கென சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உற்சவ அம்மன் சிலை வைக்கப்பட்டது. பின்னர், பவானி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பல வண்ண மலர்களைக் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதன் பின்னர், உற்சவ அம்மனுக்கு முன்பு சிவாச்சியர்கள் கொண்டு கலசங்கள் வைத்து மழை வேண்டி வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு வேள்விகள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து, கோவை குமரகுரு மருதாசல அடிகளார் தலைமையில் அம்மனுக்கு தமிழ் முறைப்படி சிவாச்சாரியார்களைக் கொண்டு லட்சார்ச்சனை நடத்தப்பட்டு, அம்மன் பாதங்களுக்கு பூக்களை தூவி மழை வேண்டி, அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர். இந்த நிகழ்ச்சியில், பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...