எழில்மிகு கோவையை உருவாக்கி நாட்டிலேயே முதன்மையான மாநகராட்சியாக உருவாக்க வேண்டும் : கோவை மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்

கோவை : கோவை மாநகராட்சியை எழில்மிகு கோவையாக உருவாக்கி, இந்தியாவிலேயே முதன்மை மாநகராட்சியாக திகழச் செய்ய அனைவரும் பணியாற்றிட வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் வலியுறுத்தினார்.

கோவை : கோவை மாநகராட்சியை எழில்மிகு கோவையாக உருவாக்கி, இந்தியாவிலேயே முதன்மை மாநகராட்சியாக திகழச் செய்ய அனைவரும் பணியாற்றிட வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் வலியுறுத்தினார்.

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் உதவி ஆணையாளர் அலுவலகக் கூட்டரங்கில் தூய்மை பாரதம் இயக்கத்தின் பணிகள் குறித்து அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் ச. பிரசன்னா ராமசாமி, ராக் அமைப்பின் செயலர் ராக் ரவீந்தரன், மருத்துவர். சாந்திபிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன் குமார் பேசியதாவது :- கோவை மாநகராட்சியில் தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில் மாநகராட்சி பணியாளர்களால் தூய்மைப் பணிகள் ஒவ்வொரு வார்டுகளிலும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வீடு வீடாகச் சென்று மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகள் சுமார் 1,000 மெட்ரிக் டன் அளவிற்கு மாநகராட்சி பணியாளர்களால் சேகரிக்கப்பட்டு வெள்ளலூர் பகுதியிலுள்ள குப்பைக்கிடங்கில்; திடக்கழிவு மேலாண்மை பணிகள் மாநகராட்சியால் மேற்கொள்ளப்படுகிறது. 

மாநகரத்தின் பிரதான சாலைகளில் இரவு நேரங்களிலும் மாநகராட்சி பணியாளர்களால் தூய்மைப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு மண்டலத்திலும், வார்டுகள் தோறும் கண்காணிப்பு அலுவலர்கள், பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திடக்கழிவு மேலாண்மை, துப்புரவு மற்றும் தூய்மைப் பணிகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வும், அனைவரின் பங்களிப்பும் அளிக்க வேண்டும். தூய்மைப் பணியாளர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய பணிகளால் குப்பைத் தொட்டிகள் இல்லாத நிலையை ஏற்படுத்தி, கோவை மாநகராட்சியை எழில்மிகு கோவையாக உருவாக்கி இந்தியாவிலேயே முதன்மை மாநகராட்சியாக திகழச் செய்ய அனைவரும் பணியாற்றிட வேண்டும், என்றார். 

இக்கூட்டத்தில், மத்திய மண்டல உதவி ஆணையர் மகேஷ்கனகராஜ், தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த டிம்பிள், தூய்மை பாரத இயக்க ஒருங்கிணைப்பு அலுவலர் திருமால், மண்டல சுகாதார அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், குணசேகரன், லோகநாதான் மற்றும் தன்னார்வ அமைப்பினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...