கொடிசியா புத்தகத் திருவிழாவில் கண்ணதாசன் இசை நிகழ்ச்சி

கோவை : கொடிசியா புத்தகத் திருவிழாவின் 7-வது நாள் சிறப்பு நிகழ்ச்சியாக கண்ணதாசன் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை : கொடிசியா புத்தகத் திருவிழாவின் 7-வது நாள் சிறப்பு நிகழ்ச்சியாக கண்ணதாசன் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.



கொடிசியா பப்பாசி அமைப்புடன் இணைந்து நடத்தும் கோவை புத்தகத் திருவிழா கடந்த 19-ம் தேதி தோடங்கியது. வரும் 28-ம் தேதி வரை அவினாசி சாலையில் உள்ள கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த புத்தக திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 7-வது நாள் நிகழ்ச்சியில், சபா பவுண்டேசன் ஏற்பாடு செய்த கண்ணதாசன் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கண்ணதாசன் எழுதி கெ.ஜே. ஜேஸூதாஸ், எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடிய பாடல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இசைக்கப்பட்டன. பாடல் எழுதப்பட்ட சூழல், பாடலின் இலக்கிய நயம், கண்ணதாசனின் தனிச்சிறப்புகள் ஆகியவற்றை கவிஞர் மரபின்மைந்தன் முத்தையா தொகுத்து வழங்கினார். 



பிரபல பாடகர்கள் எம்.ஜே. ஸ்ரீராம், பிபின், வானதி ஸ்ரீ, சபிதா ஆகியோர் பாடல்களைப் பாடிய நிகழ்வுகளும், திரைக்காட்சிகளும் எல்.இ.டி. ஸ்கீரினில் ஒளிபரப்பப்பட்டது. எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா போன்ற மாபெரும் மேதைகள் உருவாக்கிய காலத்தால் அழியாத கீதங்களை ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் ரசித்தனர். 

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...