திருப்பூரில் வெங்காய மண்டியில் லாக்கரை உடைத்து ரூ. 3 லட்சம் கொள்ளை : அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியால் வியாபாரிகள் அதிர்ச்சி

திருப்பூர் : திருப்பூரில் அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்கள், வெங்காய மண்டியின் லாக்கரை உடைத்து ரூ. 3 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

திருப்பூர் : திருப்பூரில் அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்கள், வெங்காய மண்டியின் லாக்கரை உடைத்து ரூ. 3 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.



திருப்பூர் போயம்பாளையம் பகுதியில் மேகர் அலி என்பவருக்கு சொந்தமான வெங்காய மண்டி செயல்பட்டு வருகிறது. இதில், வெங்காயம், பூண்டு முதலியவை வாங்கி இருப்பு வைத்து மொத்தமாக வியாபாரம் செய்யப்பட்டு வருகிறது. மண்டிக்கு அருகாமையிலே ஓட்டல், பிளைவுட் ஸ்டோர், மருந்துக்கடை ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நேற்று இரவு வழக்கம்போல, அப்பகுதியில் வியாபாரம் முடிந்து கடைகள் அடைக்கப்பட்டு சென்ற நிலையில், இன்று காலை வணிக நிறுவனங்களை திறக்க வந்தபோது ஓட்டல், பிளைவுட் கடை மற்றும் வெங்காய மண்டிகளில் பூட்டு உடைக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

அதில், வெங்காய மண்டியின் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ. 3 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மற்ற கடைகளில் பணம் இல்லாததால் பூட்டு மட்டும் உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. அடுத்தடுத்த கடைகளில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...