திருப்பூர் : திருப்பூரில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், அடிப்படை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பூர் : திருப்பூரில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், அடிப்படை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பூரை அடுத்த வாவிபாளையம் படையப்பா நகரைச் சேர்ந்த பனியன் தொழிலாளி நடேசன். இவரது மகன் லோகேஷ் (4). கடந்த 14-ம் தேதி காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த ரோகேஷ், திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். காய்ச்சல் சரியாகாத காரணத்தால், கோவையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் திருப்பூர் படையப்பா நகர் பகுதி மக்களிடையே அச்சத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, படையப்பா நகர் பகுதியில் குடிநீர், சாக்கடை உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாத காரணத்தினாலேயே நோய்த் தொற்று ஏற்படுவதாகவும், இது குறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில்,.சிறுவனின் உயிரிழப்பிற்கு நியாயம் வேண்டியும், அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரியும், உளத்துக்குளி சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் அடிப்படை வசதிகளை செய்து செய்து தருவதாக உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.