சந்திராயன்-2 வெற்றியின் பின்னணியில் பங்காற்றிய பி.எஸ்.ஜி. முன்னாள் மாணவர்கள்

கோவை : உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்த சந்திராயன்-2 வெற்றியின் பின்னணியில் பி.எஸ்.ஜி. கல்லூரியின் முன்னாள் மாணவர்களும் முக்கிய பங்காற்றியிருப்பது கோவைக்கு பெருமையளித்துள்ளது.

கோவை : உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்த சந்திராயன்-2 வெற்றியின் பின்னணியில் பி.எஸ்.ஜி. கல்லூரியின் முன்னாள் மாணவர்களும் முக்கிய பங்காற்றியிருப்பது கோவைக்கு பெருமையளித்துள்ளது. 

ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள ஏவு தளத்தில் இருந்து சந்திராயன் 2 விண்கலத்தை சுமந்துகொண்டு ஜி.எஸ்.எல்.வி. மார்க் III ராக்கெட் கடந்த 22-ம் தேதி விண்ணில் சீறிப்பாய்ந்தது. உலகையே இந்தியாவின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த இந்த சாதனை நிகழ்வை நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இந்த விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டதன் பின்னணியில் ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் பணியாற்றியுள்ளனர். இதில், பி.எஸ்.ஜி. கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்களின் பங்களிப்பும் இருப்பது பெருமையளிக்கும் வகையில் அமைந்துள்ளது. 

மகேந்திரகிரியில் ஐ.பி.ஆர்.சி. இயக்குநரான டி. மூக்கையா 1982-ல் பி.எஸ்.ஜி. கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினியர் பட்டப்படிப்பு பயின்றார். திருவனந்தபுரம் வி.எஸ்.எஸ்.சி. சிஸ்டம் ரிலையபிலிட்டி பி வத்சலா 1982-ம் ஆண்டு எலக்ட்டிரானிக் கம்யூனிகேசன் மற்றும் என்ஜினியரிங்கும், எஸ்.டி.எஸ்.சி. ரேஞ்ச் ஆபரேசன் இயக்குநர் பொன்கினான் 1983-ம் ஆண்டு எலக்ட்டிரானிக் என்ஜினியரிங்கும் பயின்றார். இஸ்ரோ இன்டீரியல் சிஸ்டம் யூனிட்டின் குழு தலைவர் பாஸ்கரன், 1982-ல் எலக்ட்டிரானிக் மற்றும் கம்யூனிகேசன் என்ஜினியரிங்கும், ஐ.பி.ஆர்.சி.யில் ப்ரொடக்ஷன் துணை பொது மேலாளர் சுதர்சன் 1982-ல் என்ஜினியரிங் படித்து முடித்தார். பெங்களூரூ யு.ஆர். ராவ் சேட்டிலைட் சென்டரில் கம்யூனிகேசன் சிஸ்டம்ஸ் குரூப்பில் பணியாற்றி வரும் ரமாலட்சுமி 1987-ம் ஆண்டு எலக்ட்டிரானிக் மற்றும் என்ஜினியரிங் பட்டப்படிப்பை பி.எஸ்.ஜி. கல்லூரியில் பயின்று முடித்தார். 

அதுமட்டுமில்லாமல், இஸ்ரோ முன்னாள் தலைவரும், தமிழக அரசின் மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்பின் துணைத் தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை, 1982-ல் பி.எஸ்.ஜி. கல்லூரியில் என்ஜினியரிங் முதுகலை பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது தலைமையில் சந்திராயன் 1 விண்ணில் செலுத்தப்பட்ட நிகழ்வு ஏற்கனவே அனைவரையும் பெருமையடையச் செய்தது. 

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...