கோவையில் மொத்த மருந்து விற்பனை நிறுவத்தினத்தில் ரூ. 68 லட்சம் மோசடி : தலைமறைவாக இருந்த நபர் கைது

கோவை : கோவையில் செயல்பட்டு வரும் மொத்த மருந்து விற்பனை நிறுவனத்தில் ரூ.68 லட்சம் மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த மற்றொரு குற்றவாளியை போலீசார் நேற்று கைது செய்தனர்.

கோவை : கோவையில் செயல்பட்டு வரும் மொத்த மருந்து விற்பனை நிறுவனத்தில் ரூ.68 லட்சம் மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த மற்றொரு குற்றவாளியை போலீசார் நேற்று கைது செய்தனர். 

கோவை, ஆர்‌.எஸ்புரம்‌, பொன்னுரங்கம்‌ ரோட்டில்‌ வசித்து வரும்‌ ரவிச்சுந்திரன்‌ என்பவர்‌ தன்‌ சகோதரர்களுடன்‌ இணைந்து மொத்த விற்பனை நிறுவனம்‌ வைத்து நடத்தி வருகிறார். தமிழகத்தில்‌ பல்வேறு ஊர்களில்‌ உள்ள மருந்து கடைகளுக்கு மொத்தமாக இங்கிலீஸ்‌ மருந்துகள்‌ சப்ளை செய்து வந்தார். இந்த நிறுவனத்தில்‌ 70 பேர்களுக்கு மேல்‌ வேலை செய்து வந்த நிலையில், தஞ்சாவூரைச் சேர்ந்த ராமச்சந்திரன்‌ 20 வருடமாக வேலை செய்து வந்துள்ளார், அவர்‌ தஞ்சாவூர்‌, திருச்சி, ராஜபாளையம்‌, சிவகாசி போன்ற பல்வேறு வெளியூர்களுக்கு மருந்துகளை மொத்தமாக ஆர்டர்‌ எடுத்து அனுப்பியும்‌, அதற்கான தொகைகளை பணமாகவும்‌, வங்கி மூலமாகவும்‌ வசூலித்து வந்துள்ளார்.

‌இந்த நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 23-ம் தேதி முதல் கடந்த மே 14-ம் தேதி வரையிலான காலகட்டத்தில்‌ குறிப்பிட்ட சில மருந்து கடைகளுக்கு மருந்துகள்‌ அனுப்பியும்‌, அதற்குரிய தொகையை நிறுவனத்தின் வங்கிக்‌ கணக்கிற்கு மருந்து வாங்கியவர்களை பணம்‌ அனுப்ப வைத்து ரூ. 68,86,832 ராமச்சந்திரன்‌ மற்றும்‌ கணேஷ்குமார்‌ ஆகியோர் நிர்வாகத்திற்கு மோசடியை ஏற்படுத்தியுள்ளனர். 

இது தொடர்பாக கொடுத்த புகாரின்‌ பேரில்‌ கோவை மாநகர குற்றப்பிரிவில்‌ வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கோவை மாநகர காவல்‌ ஆணையாளர்‌ சுமித்சரணின் உத்தரவுப்படி, காவல்‌ துணை ஆணையர்‌ பெருமாளின் மேற்பார்வையில்‌, உதவி ஆணையர்‌ சந்திரசேகரனின் தலைமையில், காவல்‌ ஆய்வாளர்‌ நாகராஜன், உதவி ஆய்வாளர்‌ ஜமுனா மற்றும்‌ போலீஸார்‌, ராமச்சந்திரனை கடந்த 20-ம் தேதி கைது செய்தனர். இந்த நிலையில், தலைமறைவாக இருந்த கணேஷ்குமார்‌ என்பவரை இன்று போலீசார் நேற்று கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...