மாசுபாடில்லாத விநாயகர் சதுர்த்தி : மேட்டுப்பாளையத்தில் கிழங்கு மாவுகளைக் கொண்டு தயாரிக்கப்படும் சிலைகளுக்கு நல்ல வரவேற்பு

கோவை : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முற்றிலும் இயற்கைப் பொருட்களாலான கிழங்கு மாவுகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டும் கலைநயமிக்க விநாயகர் சிலைகளுக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

கோவை : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முற்றிலும் இயற்கைப் பொருட்களாலான கிழங்கு மாவுகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டும் கலைநயமிக்க விநாயகர் சிலைகளுக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

இவ்வாண்டு விநாயகர் சதுர்த்தி வைபவம் வருகின்ற செப்டம்பர் மாதம் 2-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதற்கான, விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மேட்டுப்பாளையத்தில் விறுவிறுப்படைந்துள்ளது. கொங்கு மண்டலத்தில் குறிப்பிட்ட சில இடங்களைத் தவிர மற்ற இடங்களில் கைவினை கலைஞர்கள் இல்லாததால், கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நாகை, கடலூர் போன்ற பிற மாவட்டங்களில் இருந்து விநாயகர் சிலைகள் வாங்கி வரப்பட்டு பிரதிஷ்டை செய்து வழிபடுவது வழக்கமாக இருந்து வந்தது. மேலும், சிலர் அங்கிருந்து மொத்தமாக கொள்முதல் செய்து வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தனர்.



இந்த நிலையில், தற்போது மேட்டுப்பாளையத்தை அடுத்த காரமடை காந்தி நகர் பகுதியில் கடலூரில் இருந்து வந்த கைவினை கலைஞர்கள் குழு ஒன்று கடந்த இரண்டு மாதங்களாக தங்கி எதிர்வரும் விநாயகர் சதுர்த்திக்காக சிலைகளை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். முற்றிலும் இயற்கையான காகித கூல், மரவள்ளி மாவு மற்றும் மூங்கில் குச்சிகள் போன்ற இயற்கை, மூலப்பொருட்களை கொண்டே இந்த விநாயகர் சிலைகள் தயாராகி வருகின்றன. சுமார் 2 அடி சிலைகள் முதல் 10 அடி உயரம் கொண்ட சிலைகள் வரை மிகுந்த கலைநயத்துடன் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டின் புதிய வரவாக சிவனின் உருவத்தில் விநாயகர், தலையில் பிறையுடன் கங்காதேவி மற்றும் கழுத்தில் பாம்பு மாலை கொண்ட சிலை, பாகுபலி விநாயகர், கையில் தபேலாவுடன் தலைக்குமேல் கோலாட்டம், சிவன், பார்வதியுடன் மூன்று தலை விநாயகர் என பல்வேறு வடிவங்களில் 50-க்கும் மேற்பட்ட புது மாடல்களில் சிலைகள் தயாராகி வருகின்றன. 

சிலைகளின் உயரத்திற்கு ஏற்றவாறு ரூ. 2,500 முதல் ரூ. 20,000 வரையில் சிலைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. நீர் நிலைகளில் சிலைகளை கரைக்கும் போது எவ்வித பாதிப்பும் இன்றி இருக்க வேண்டும் என்பதால், வர்ணம் பூசுவதற்கு தண்ணீர் மூலம் வாட்டர் பெயிண்ட் கொண்டு வண்ணம் தீட்டப்பட்டு வருகிறது. 



பாரம்பரியமாகக் கடந்த நான்கு தலைமுறைகளாக இந்தக் குழு இப்பணியினை மேற்கொண்டு வருவதாகவும், விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் வழிபாடு அதிகம் உள்ள கோவை மாவட்டத்தில் தற்போது இந்த முகாம் அமைத்து சிலைகளை செய்து வருவதாக கைவினை கலைஞர்கள் தெரிவித்தனர். சீசன் முடிந்தாலும், அதற்கு பின்னர் தொடர்ந்து கொலு பொம்மைகள், கிருஷ்ணர் பொம்மைகள் மற்றும் தசராவிற்கு அம்மன், துர்கை அம்மன் பொம்மைகள், ஆகியவை செய்து தங்களது வாழ்க்கையை நடத்தி வருவதாகக் கூறும் இந்த கலைஞர்கள், சிலைகளை விற்பனை செய்வதில் பல்வேறு பிரச்சனைகள் இருந்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, அரசு தங்களுக்கான விற்பனை தளத்தை மாவட்ட வாரிய அமைக்க ஆவண செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...