கோவை : கோவையில் படுகாயங்களுடன் கிடந்த கழுதையை மீட்ட கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள், ஸ்நேகலாயா உதவியுடன் மேட்டுப்பாளையம் கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கவுண்டர்மில்ஸ் பகுதியில் உள்ள குப்பைத்தொட்டி அருகே பலத்த காயங்களுடன் கழுதை ஒன்று எழுந்திரிக்கக் கூட முடியாத நிலையில் படுத்துக் கிடந்தது. இதனைக் கண்ட அந்த வழியாக சென்ற கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் மனோஜ்குமார், சவிதா, ஸ்வாதி மற்றும் பிரான்சிஸ் ஆகியோர் கழுதையின் நிலையை புரிந்து கொண்டனர். பின்னர், கோவை மாநகராட்சிக்கு தொடர்பு கொண்டு உதவி கோரினர். ஆனால், அதிகாரிகள் செவி சாய்க்காத நிலையில், வேறொரு விலங்குகள் அமைப்பைத் தொடர்பு கொண்டனர். அங்கும் எந்தவித பதிலும் வரவில்லை.
பின்னர், ஸ்நேகாலயா அமைப்பினருக்கு தொடர்பு கொண்டனர். உடனடியாக அந்த அமைப்பின் மூலம் சம்பவ இடத்திற்கு மீட்பு வாகனம் அனுப்பி வைக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள், பத்திரமாக வாகனத்தில் ஏற்றப்பட்ட கழுதைக்கு உணவும், தண்ணீரும் கொடுத்தனர். பின்னர், சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
கடந்த 2 நாட்களாக காயங்களுடன் அப்பகுதியில் படுத்துக் கிடந்த கழுதையை மனிதநேயத்துடன் மீட்க உதவிய கல்லூரி மாணவர்களின் செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.