வங்கி பணித் தேர்வில் உயர்பிருவினருக்கு மதிப்பெண் நிர்ணயித்த விவகாரம் : கோவை எஸ்.பி.ஐ. வங்கியை முற்றுகையிட்டவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே கடும் தள்ளு முள்ளு

கோவை : பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் பிரிவினருக்கு வங்கி தேர்வில் 28 மதிப்பெண் நிர்ணயித்ததைக் கண்டித்து எஸ்.பி.ஐ வங்கியை முற்றுகையிட்டவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.


கோவை : பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் பிரிவினருக்கு வங்கி தேர்வில் 28 மதிப்பெண் நிர்ணயித்ததைக் கண்டித்து எஸ்.பி.ஐ வங்கியை முற்றுகையிட்டவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

எஸ்.பி.ஐ.வங்கி பணியிடங்களுக்கான தேர்வில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் பிரிவினருக்கு 28 மதிப்பெண் பெற்றால் போதும் என நிர்ணயித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை திரும்பப் பெற வலியுறுத்தி பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கோவை எஸ்.பி.ஐ. தலைமை அலுவலகத்தை 14 அமைப்புகளை சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். த.பெ.தி.க. பொதுச்செயலாளர் கு. இராமகிருட்டிணன் தலைமையில் ஈடுபட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து வங்கிக்குள் நுழைய முயன்றனர். அப்போது, அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் போராட்டக்காரர்கள் மற்றும் போலீசாரிடையே கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.



ஏற்கனவே, எஸ்.பி.ஐ. வங்கியில் உயர் பிரிவினர் அதிக அள்வில் உள்ள நிலையில், இந்த உத்தரவு அவர்களது எண்ணிக்கையை அதிகரிக்கும் என்றும் , இதனால், பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் பாதிக்கப்படுவார்கள் என கு.இராமகிருட்டிணன் தெரிவித்தார்.

மேலும், அவர் பேசுகையில், ”பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் பிரிவினர் விண்ணப்பத்ததன் காரணாமாகவே இந்த மதிப்பெண் நிர்ணயிக்கபட்டதாக எஸ்.பி.ஐ கூறியுள்ளது. அச்சமூகத்தில் ஏழைகள் குறைவாக இருப்பதை காட்டுகின்றனர். இதனை திரும்ப பெற வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளோம்,” என்றார்.



இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த வங்கி முற்றுகைக் காரணமாக கோவை மத்திய ரயில்நிலையம் அருகே பரப்பான சூழல் நிலவியது.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...