உதகையில் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய அ.தி.மு.க. பிரமுகர் தாக்குதல் : கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அதிரடி நீக்கம்

நீலகிரி : உதகையில் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய அ.தி.மு.க. பிரமுகர் படகு இல்லம் மோகன் மீது மாவட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார்.

நீலகிரி : உதகையில் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய அ.தி.மு.க. பிரமுகர் படகு இல்லம் மோகன் மீது மாவட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார்.

உதகை மெயின் பஜார் பகுதியில் உள்ள பஜாஜ் பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும்  பிரகாஷுடன் (33) ஏற்பட்ட வாகனம் நிறுத்தம் தொடர்பாக பிரச்சனையால், அ.தி.மு.க. பிரமுகர் தலைமையில் 20 பேர் கொண்ட கும்பல், அவர்களின் அலுவலகத்தில் புகுந்து, கடுமையாக தாக்குதல் நடத்தி உள்ளனர். இது அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.



இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிந்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில், வெளியான  சி.சி.டி.வி. வீடியோவை அடிப்படையாக வைத்தும், ரவுடிசம் செய்த அ.தி.மு.க. படகு இல்லம் மோகன் மற்றும் தூண்டுதலாக இருந்தவர்கள் மீதும் சட்டப்படி தகுந்த நடவடிக்கை  எடுக்க வலியுறுத்தி பி1 காவல்நிலையத்தை  உறவினர்கள் முற்றுகையிட்டனர். ஆனால், எப்.ஐ.ஆர் பதிவு செய்து கைது செய்ய தாமதம் ஆனதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். 



இதனைத் தொடர்ந்து, படகு இல்ல மோகன் என்றழைக்கப்படும் லாரன்ஸ் மோகனை,  பாசறை  மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ். நேற்று இரவு அறிவித்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...