கோவையில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட கஞ்சா ஊறுகாய்கள் பாலக்காடு மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் : இருவர் கைது

கோவை : கோவையில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட கஞ்சா ஊறுகாய்கள் வாளையார் சோதனை சாவடியில் பாலக்காடு மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை : கோவையில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட கஞ்சா ஊறுகாய்கள் வாளையார் சோதனை சாவடியில் பாலக்காடு மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

கஞ்சா போன்ற தடை செய்யப்பட்ட போதை பொருட்களை கட்டுப்படுத்த போலீசார் என்ன முயற்சிகள் எடுத்தாலும், அதன் பயன்பாடுகளும், விற்பனைகளும் குறைந்தபாடில்லை. அதேபோல, கஞ்சா பொருட்களை பயன்படுத்துபவர்கள் அதை பல்வேறு வடிவங்களில் பயன்படுத்துகின்றனர். இப்படி பயன்படுத்தும் வடிவங்களில் கஞ்சா பொருட்கள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக வெளியான தகவல் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வாளையாறு சோதனைச் சாவடி அருகே பாலக்காடு மதுவிலக்கு போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்துக்கிடமான சொகுசு கார் ஒன்று வந்தது. அந்தக் காரை நிறுத்திய போலீசார் காருக்குள் சோதனை செய்தனர். காருக்குள் இருந்த ரகசிய அறையில் ஊறுகாய் பாக்கெட்டுகள் கிடந்தது. இந்த நிலையில், அந்த ஊறுகாய் பாக்கெட்டுகளை எடுத்து சோதனை செய்த போலீசார், கஞ்சா கலந்த ஊறுகாய் என்பதை உறுதி செய்தனர். இதில், அவர்களிடம் இருந்து 8 கிலோ கஞ்சா ஊறுகாய்களை பறிமுதல் செய்த போலீசார், காருக்குள் இருந்த இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், இவர்கள் இருவரும் கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்த அன்சாஸ் (37), ஷெரிப் (31) என்பது தெரியவந்தது. மேலும், இவர்கள் கோவையிலிருந்து இந்த கஞ்சா ஊறுகாயை கடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. 

இந்த நிலையில், போலீசார் கோவையில் எந்தப் பகுதியில் கஞ்சா ஊறுகாய் தயாரிக்கப்படுகிறது ..?, எப்படி தயாரிக்கப்படுகிறது..?, யார் யார் தொடர்பில் உள்ளனர் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...