கோவை : மாணவர்களுக்கு கல்வி மட்டுமல்ல, விளையாட்டும் அவர்களது வாழ்க்கையை மாற்றும் வல்லமை கொண்டது என்பதால், விளையாட்டுத்துறையில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என பள்ளி மாணவர்களுக்கு டெல்டா கமோண்டர் ஏசன் அறிவுரை வழங்கினார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த ஆலாங்கொம்பு பகுதியில் செயல்படும் சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளியின் 19 ஆம் ஆண்டு விளையாட்டு விழா போட்டிகள் இன்று நடைபெற்றது. இதில், மத்திய டெல்டா படைத்தளபதி ஏசன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பள்ளி மாணவ, மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, விளையாட்டு விழாவை தொடங்கி வைத்தார். பின்னர், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

பின்னர் நிகழ்ச்சியில் டெல்டா தளபதி ஏசன் பேசியதாவது :- கல்வி மட்டுமின்றி விளையாட்டும் ஒருவனை வாழ்க்கையில் முன்னேற்றம் அடையச் செய்யும். விளையாட்டு என்பது அவர்களது வாழ்க்கையை மாற்றும் வல்லமை கொண்டதால், விளையாட்டுத் துறையில் மாணவர்கள் அதீத கவனம் செலுத்த வேண்டும். இன்று தனியார் பள்ளிகள் மட்டுமின்றி, அரசு பள்ளி மாணவர்களும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற தேர்வுகளில் வெற்றி பெறுகிறார்கள். எதிர்காலத்தில் மாணவர்கள் தங்கள் தகுதியை வளர்த்திக் கொண்டு விளையாட்டுத் துறையில் அதிக அளவில் ஈடுபடுத்தி வாழ்க்கையில் வெற்றி பெற்று தங்களது தகுதியினை உயர்த்திக் கொள்ள வேண்டும். கல்வி மட்டுமல்ல விளையாட்டும் ஒருவனை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்பது இன்று நமது இந்தியாவில் ஏராளமானோர் சாதித்துக் காட்டியுள்ளனர், என பேசினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் மணிமேகலை மோகன்தாஸ், பள்ளி முதல்வர் சுகுனாதேவி மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.