கோவை : தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட என்.ஜ.ஏ. சோதனை குறித்து சமூக வலைதளத்தில் விமர்சனம் செய்த தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 39 வயதுமிக்க நபர் கைது செய்யப்பட்டார்.

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்களைக் குறிவைத்து குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டியதில் கேரளா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்பில் இருந்ததாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர். விசாரணையை ஒட்டி, கடந்த வாரம் சென்னையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அந்த சோதனையின் அடிப்படையில் இந்த வழக்கில் தொடர்புடைய சிலர் துபாயில் தங்கியிருப்பது தெரியவந்தது. அவர்கள் அந்நாட்டு காவல் துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். நாடு கடத்தப்பட்ட 14 பேரையும் டெல்லியில் என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்த நிலையில், அரசியல் நோக்கத்திற்காக என்.ஐ.ஏ. அதிகாரிகள் இந்த சோதனைகளை நடத்தி வருவதாக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையைச் சேர்ந்த எம். தாஜ் (39) என்பவர் சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டிருந்தார். இதையடுத்து, வன்முறையை தூண்டும் வகையில் கருத்து பதிவிட்டதாக வழக்குப்பதிவு செய்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் தாஜை கைது செய்துள்ளனர்.
இது குறித்து திருவாரூர் எஸ்.பி. எம். துரை கூறுகையில், "இந்த வழக்கில் எந்தவிதமான தொடர்பும் தாஜிற்கு கிடையாது. ஆனால், சமூக வலைதளங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகளின் சோதனையை தவறுதலான கண்ணோட்டத்தில் சித்தரித்து கருத்து பதிவிட்டுள்ளார்," எனக் கூறினார்.