கோவையில் மன உளைச்சலினால் தனியார் கல்லூரி மாணவி ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை முயற்சி

கோவை : ஈச்சனாரி அருகே உள்ள ரத்தினம் கல்லூரியில் படிக்கும் மாணவி மன உளைச்சலால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : ஈச்சனாரி அருகே உள்ள ரத்தினம் கல்லூரியில் படிக்கும் மாணவி மன உளைச்சலால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், பழனியம்மாள் தம்பதிகளின் மகள் ஜெயசூர்யா (17). இவர் ஈச்சனாரி அருகே உள்ள ரத்தினம் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் இன்று அதிகாலை தற்கொலை செய்யும் நோக்கத்தில், விடுதியில் இருந்து வெளியே சென்று கல்லூரி அருகே உள்ள தண்டவாளத்தில் தலை வைத்து படுத்துள்ளார். அப்போது, அவ்வழியாக வந்த ரயில் வேகமாக வருவதை கண்டு பயந்து போன மாணவி தண்டவாளத்தை விட்டு எழுந்து ஓட முயற்சி செய்தார். 

ஆனால், அதற்குள் ரயில் மாணவியின் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட மாணவிக்கு தலை மற்றும் கை, கால் என உடம்பின் பல்வேறு பகுதிகளில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவ்வழியாக சென்றவர்கள் உடனடியாக மாணவியை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது, கோவை அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கல்லூரி மாணவி இரவு நேரத்தில் விடுதியில் இருந்து வெளியே சென்று ரயில் முன் பாய்ந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....