கோவையில் சட்டவிரோதமாக ரேபிடோ (Rapido) செயலி மூலம் இயக்கப்பட்ட இருசக்கர வாகனம் பறிமுதல்

கோவை : தனிநபர் பயன்பாட்டிற்காக வாங்கப்பட்டு, ரேபிடோ செயலியின் மூலம் சட்டவிரோதமாக போக்குவரத்து வாகனங்களாக இயக்கப்பட்ட இருசக்கர வாகனங்களை மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பறிமுதல் செய்தார்.


கோவை : தனிநபர் பயன்பாட்டிற்காக வாங்கப்பட்டு, ரேபிடோ செயலியின் மூலம் சட்டவிரோதமாக போக்குவரத்து வாகனங்களாக இயக்கப்பட்ட இருசக்கர வாகனங்களை மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பறிமுதல் செய்தார். 

கோவை மாவட்டத்தில்‌ ரேபிடோ செயலி வாயிலாக இருசக்கர வாகனங்கள்‌, வாடகைக்காக பயன்படுத்தி வரும்‌ குற்ற நிகழ்வுகள்‌ அதிகரித்துள்ளது. இதை தடுக்கும் வகையில்,‌ வட்டாரப்‌ போக்குவரத்து அலுவலர்களால்‌ அவ்வப்பொழுது சிறப்பு கூட்டு தணிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டு, ரேபிடோ செயலி வாயிலாக போக்குவரத்து வாகனங்களாக இயக்கப்படும்‌ இருசக்கர வாகனங்களுக்கு மோட்டார்‌ வாகனச்சட்டத்தின்படி அடிக்கடி சோதனைகள்‌ மேற்கொள்ளப்பட்டு, உரிய சோதனை அறிக்கைகள்‌ வழங்கப்பட்டு வாகனங்கள்‌ சிறைபிடிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில்,‌ சொந்த பயன்பாட்டிற்கு (போக்குவரத்து அல்லாத வாகனம்‌) என பதிவு செய்யப்படும்‌ இருசக்கர வாகனங்கள்‌ வாடகைக்கு போக்குவரத்து வாகனங்களாக ரேபிடோ அல்லது ரென்ட் ஏ பைக் போன்ற இதர செயலிகள்‌ மூலம்‌ பயன்படுத்த தமிழகத்தில்‌ இதுநாள் வரை அனுமதி ஏதும்‌ வழங்கப்படவில்லை. எனவே, பொதுமக்கள்‌ மற்றும்‌ இருசக்கர வாகன உரிமையாளர்கள்‌ ரேபிடோ போன்ற செயலியை பதிவிறக்கம்‌ செய்து அதில்‌ பயணம்‌ செய்ய வேண்டாம்‌ என எச்சரிக்கப்படுகிறார்கள்‌.

மேலும்,‌ போக்குவரத்து அல்லாத வாகனங்களாக இருசக்கர வாகனங்கள்‌ பதிவு செய்யப்பட்டு, போக்குவரத்து வாகனங்களாக வாடகைக்கு பயன்படுத்துவது என்பது, மோட்டார்‌ வாகனச்சட்டபடி குற்றமாகும்‌. குறிப்பாக, இவ்வாகனங்களில்‌ பயணிப்பவர்களுக்கு விபத்து ஏதேனும்‌ ஏற்பட்டால்‌ இழப்பீடு மற்றும்‌ காப்பீடு தொகை ஏதும்‌ பெற இயலாத நிலை உள்ளது.

எனவே, இனி வரும்‌ காலங்களில்‌ பொதுமக்கள்‌ ரேபிடோ செயலி மூலம்‌ தங்களது வாகனங்களைப் பயன்படுத்துவது அல்லது ரேபிடோ செயலி மூலம்‌ வாகனத்தில்‌ பயணிப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்‌. தவறும்‌ பட்சத்தில்‌, இருசக்கர வாகனத்தினை வாடகை வாகனமாக பயன்படுத்தும்‌ வாகன உரிமையாளர்கள்‌, ஓட்டுநர்கள்‌ மற்றும்‌ அவ்வாகனத்தில்‌ பயணம்‌ செய்பவர்கள்‌ மீதும்‌ கடுமையான நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்படும்‌. மேலும்‌, போக்குவரத்துத்துறை அலுவலர்களால்‌ வாகனங்கள்‌ சிறைபிடிக்கப்பட்டு மோட்டார்‌ வாகனச்சட்டத்தின்படி உரிய நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்படும்‌, என கோவை மாவட்ட ஆட்சியர்‌ எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....