கோவை : கோவை டவுன்ஹால் அருகே மது பிரியர் ஒருவர் மதுபோதையில் செல்போன் மற்றும் பணத்தை சாலையின் ஓரத்தில் விட்டுச் சென்றதை மீட்ட அப்பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள், அதனை உரியவரிடம் கொண்டு சேர்க்குமாறு கோவை மாநகர காவல் துணை ஆணையரிடம் ஒப்படைத்தனர்.

கோவை டவுன்ஹால் பகுதிக்கு தினமும் பல்வேறு காரணங்களுக்காக ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இப்படி மக்கள் அதிகமாகக் கூடும் இந்த பகுதியில் ஜேப்படி கொள்ளையர்களின் நடமாட்டமும் அதிக அளவில் உள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மதுபோதையில் மணிக்கூண்டின் முன் உள்ள ஆட்டோ ஸ்டேண்ட் அருகே ஒருவர் பணம் மற்றும் செல்போன்களுடன் படுத்துக் கிடந்தார். இப்படி இருக்க அவரிடம் பணம் மற்றும் செல்போனை அறிந்த சில சந்தேகத்திற்குரிய நபர்கள் அவரைச் சுற்றிச் சுற்றி வந்தனர். இதையடுத்து, அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர் சர்புதீன் (50) மற்றும் அருகே உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் சாஜகான், ஜோசப், காஜா உசேன் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் பணம் மற்றும் செல்போனை எடுத்து பத்திரப்படுத்தினர்.
மேலும், இரண்டு நாட்கள் ஆகியும் யாரும் வந்து பணம் மற்றும் செல்போனை கேட்காததால் ஆட்டோ ஓட்டுநர்கள் இன்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு மாநகர காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணனிடம் பணம் மற்றும் செல்போனை ஒப்படைத்தனர். பின்னர், ஆட்டோ ஓட்டுநர்கள் முன்பு போலீசார் பணத்தை எண்ணியபோது, 4 ஆயிரத்து 417 ரூபாய் இருப்பது தெரியவந்தது.
அப்போது, பணம் மற்றும் செல்போனை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்களிடம் "தினமும் குறைந்தபட்ச அளவில் பணம் சம்பாதித்தாலும், அடுத்தவர் பணம் நமக்கு எதற்கு என்று உரியவரிடம் ஒப்படைத்தற்கு" துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் வாழ்த்துக்களை தெரிவித்து கௌரவப்படுத்தினார். இந்த ஒப்படைப்பு நிகழ்வில் அ.தி.மு.க. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் அன்ஷர் பாஷா மற்றும் பணத்தை பாதுகாப்பு படுத்திய ஆட்டோ ஓட்டுநர்கள் உடனிருந்தனர்.