நீலகிரி : புற்றுநோய் உள்ளிட்ட ஆபத்தான நோய்களுக்கு மூலிகை செடிகள் மூலம் மருந்துகள் தயாரிப்பது குறித்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொள்ளும் 2 நாள் சர்வதேச கருத்தரங்கு உதகையில் இன்று தொடங்கியது.

நீலகிரி மாவட்டம் உதகையில் இயங்கி வரும் தனியார் சர்வதேச மருந்தாக்கியல் கல்லூரியில் புற்றுநோய் உள்ளிட்ட ஆபத்தான நோய்களுக்கு இந்தியாவில் வளரும் மூலிகை செடிகளைக் கொண்டு மருந்துகள் கண்டுபிடிப்பது குறித்த இரண்டு நாட்கள் நடக்கும் கருத்தரங்கு நடைபெற்றது. இதில், இந்தியாவைச் சேர்ந்த 7 ஆராய்ச்சியாளர்களும், ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த 4 ஆராய்ச்சியாளர்களும் மற்றும் மேற்கு இந்திய தீவுகளைச் சேர்ந்த 3 ஆராய்ச்சியாளர்களும் என மொத்தம் 14 ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்று மூலிகை செடிகளை ஆராய்ச்சி செய்து, அதன் ஆய்வுகள் குறித்த கலந்தாய்வு நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில் கோவை, மைசூர் போன்ற பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மருந்தாக்கியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.