தாராபுரம் அருகே அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலி

திருப்பூர் : தாராபுரம் அருகே அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

திருப்பூர் : தாராபுரம் அருகே அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். 



கோவையில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசுப் பேருந்து திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள காதப்புள்ளப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பள்ளபட்டியிலிருந்து திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த காரும், அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சுரேஷ் பாண்டி, சிரிவளன் மற்றும் சிவனேசன் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காரை ஓட்டி வந்த ராஜபாண்டி பலத்த காயங்களுடன் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 



உயிரிழந்த மூவரும் வத்தலகுண்டில் உள்ள தனியார் எலக்ட்ரிக்கல் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோர விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள தாராபுரம் போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....