கோவை : புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி கோவை சட்டக்கல்லூரி முன்பு அக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மருதமலை அருகே உள்ள அம்பேத்கர் சட்டக்கல்லூரியின் முன்பு சுமார் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று போராட்டம் நடத்தினர். அப்போது, புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் எனக் கூறினர். அதோடு, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக போராட்டத்தில் கலந்து கொண்ட சட்டக்கல்லூரி மாணவி ரஞ்சனி கண்ணம்மா கூறுகையில், "புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டால், கல்வி அமைப்பில் பல்வேறு சிக்கல்கள் உருவாகும். மேலும், 3,5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுமுறை கொண்டுவரப்படும். இதில், மாணவர்கள் தேர்ச்சியடையாமல் போனால், இடைநிற்றல் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். அதோடு, சிறப்பாக செயல்படாத கல்லூரிகள் நூலகமாக மாற்றவும் இந்த புதிய கல்விக் கொள்கை வழிவகை செய்கிறது," என்றார்.
இதேபோல, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும், இந்தத் திட்டத்தினால், சுமார் 25,000 சதுர கி.மீட்டர் தொலைவில் உள்ள காற்று மற்றும் தண்ணீர் மாசுபடுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.