நீலகிரி : தொடர் மழையின் காரணமாக முதுமலை பகுதிகளில் மீண்டும் பசுமை திரும்பியுள்ளதால், சாலை ஓரத்தில் உள்ள பசும்புற்களை உண்பதற்காக வனவிலங்குகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்லும் காட்சிகள் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் முதுமலைப் பகுதியில் அதிகமாகக் காணப்பட்டது. இதன் காரணமாக, இப்பகுதியில் கடந்த இரண்டு மாத காலமாக வறண்டு காணப்பட்ட வனங்களில் புற்கள் உள்ளிட்ட தாவரங்கள் செழித்து வளர்ந்துள்ளன. மேலும், வனத்தை ஒட்டியுள்ள பகுதியில் பசும்புற்களும் முளைத்துள்ளன. இந்த நிலையில், தாவரங்களை உணவாக உட்கொள்ளும் காட்டெருமைகள், மான்கள் உள்ளிட்டவை கூட்டம், கூட்டமாக சாலை ஓரத்தில் உள்ள புற்களை மேய்ந்து வருகின்றன.
கடந்த சில நாட்களாக வறட்சியினால் உணவைத் தேடி வனவிலங்குகள் சென்றதால். அவற்றைக் காண முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்திருந்தனர். தற்போது, முதுமலையில் இருந்து கல்லட்டி வழியாக உதகை வரும் சுற்றுலாப் பயணிகள், சாலையோரத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் வனவிலங்குகளை குடும்பத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர். மேலும், இவர்கள் தங்கள் செல்போனில் படம் எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர்.