நீலகிரி : கார்கில் போர் நினைவு தினத்தை முன்னிட்டு குன்னூரில் மினி மாரத்தான் போட்டியில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிநாட்டினரும் கலந்து கொண்டனர்.

குன்னூர் வெலிங்டன் தங்கராஜ் நினைவு விளையாட்டு மைதானத்தில் கார்கில் நினைவு தினத்தை முன்னிட்டு மினி மாரத்தான் பேட்டி நடைபெற்றது. மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில், 3 கி.மீ. தொலைவுடைய ஜுனியர் பிரிவில் 11 வயது முதல் 15 வயது வரை உள்ள சிறுவர்களும், 4 கி.மீ. தொலைவைக் கொண்ட சீனியர் பிரிவில் 16 வயது முதல் 25 வரையிலான வயதுடையவர்களும், ஆண், பெண் என இருபாலாரைச் சேர்ந்த பெரியவர்களுக்கு 5. கி.மீட்டர் ஒட்டத் தொலைவு நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஓட்டத்தொடரில் வெற்றி பெற்றவர்களுக்கு நாளை பரிசுத்தொகையும், கார்கில் நினைவுப்பரிசும் வழங்கப்படவுள்ளது. இந்த கார்கில் நினைவு நாள் மினி மாரத்தான் ஒட்டத்தொடரில் உள்ளூர் மட்டும் அல்லாமல் வெளியூர் மற்றும் வெளிநாட்டினர் கலந்து கொண்டனர்.