கோத்தகிரியில் காட்டெருமை தாக்கியதில் பெண் கூலித் தொழிலாளி பலி

நீலகிரி : கோத்தகிரி அருகே தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பெண் கூலித் தொழிலாளி காட்டெருமை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

நீலகிரி : கோத்தகிரி அருகே தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பெண் கூலித் தொழிலாளி காட்டெருமை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விலங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தேயிலை பறித்துக் கொண்டிருந்த மிளிதேன் கிராமத்தைச் சேர்ந்த பேபி (35) என்ற பெண் கூலித் தொழிலாளியை, அங்கு வந்த காட்டெருமை கடுமையாக தாக்கியது. இதில், அவருக்கு கை மற்றும் வயிறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைக் கண்ட சக தொழிலாளர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனையில் பேபியின் உடல் வைக்கப்பட்டுள்ளது. 



இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "காட்டெருமைகளின் நடமாட்டம் குறித்து பலமுறை வனத்துறைக்கு தகவல் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை," என்று குற்றம்சாட்டியுள்ளனர். 

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...