அரசு மடிக்கணினி வழங்கப்படாத விவகாரம் : பள்ளி மாணவர்களுக்கு ஆதரவாக மனு அளிக்க வந்த எஸ்.எஃப்.ஐ. தலைவர் வலுக்கட்டாயமாக கைது

கோவை : அரசு மடிக்கணினி வழங்காதது குறித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த சி.எஸ்.ஐ. ஆண்கள் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஆதரவாக வந்த எஸ்.எஃப்.ஐ. தலைவர் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார்.


கோவை : அரசு மடிக்கணினி வழங்காதது குறித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த சி.எஸ்.ஐ. ஆண்கள் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஆதரவாக வந்த எஸ்.எஃப்.ஐ. தலைவர் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார். 

அரசின் இலவச மடிக்கணினி இன்னும் வழங்கப்படாத நிலையில், சி.எஸ்.ஐ. ஆண்கள் உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்திருந்தனர். அப்போது, அவர்களுக்கு ஆதரவாக இந்திய மாணவர்கள் கூட்டமைப்பின் தலைவர் தினேஷ் ராஜாவும் அங்கு வந்திருந்தார். மாணவர்களிடம் அவர் பேசிக் கொண்டிருக்கும் போது, போராட்டமோ அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை உருவாகாமல் இருக்கும் வண்ணம், தினேஷ் ராஜாவை முன்னெச்சரிக்கையாக போலீசார் கைது செய்ய முயன்றனர். 



அப்போது, மாணவர்களிடம் பேச அவர் அனுமதி கேட்டார், ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த போலீசார், அவரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தனர்.



இதனிடையே, மாவட்ட ஆட்சியரிடம் பேசுவதற்கு அனுமதி கொடுக்குமாறு போலீசாரிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அதற்கும் அனுமதி மறுத்த போலீசார், அவரை வேனில் ஏற்றினர். அப்போது, மடிக்கணினி வழங்கப்படாத பள்ளி மாணவர்களுக்கு உடனடியாக அதனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு இந்திய மாணவர்கள் கூட்டமைப்பின் தலைவர் தினேஷ் ராஜா கோரிக்கை விடுத்தார். 

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....