159-வது ஆண்டு வருமான வரி தினத்தினை முன்னிட்டு கோவையில் ரத்த தானம் முகாம்

கோவை : 159வது ஆண்டு வருமான வரி நாள் விழாவில் இரத்த தான முகாமை வருமான வரித்துறை தலைமை ஆணையர் துர்காசரண் தாஸ் துவக்கி வைத்தார்.

கோவை : 159வது ஆண்டு வருமான வரி நாள் விழாவில் இரத்த தான முகாமை வருமான வரித்துறை தலைமை ஆணையர் துர்காசரண் தாஸ் துவக்கி வைத்தார்.

கோவை மாவட்டம், வருமான வரித்துறை அலுவலகத்தில் நேற்று 159-வது ஆண்டு வருமான வரி தினத்தினை முன்னிட்டு வருமான வரித்துறை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர் பங்கு பெற்ற இரத்த தான முகாமினை வருமான வரித்துறை தலைமை ஆணையர் துர்காசரண் தாஸ் துவக்கி வைத்தார். இம்முகாமில், வருமான வரித்துறை ஆணையர் பென்னி ஜான், முதன்மை ஆணையர் ஜி.ஆர். ரெட்டி கூடுதல் வருமான வரித்துறை ஆணையர் சுந்தரேசன், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் அசோகன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர், வருமான வரித்துறை தலைமை ஆணையர் துர்காசரண் தாஸ் கூறியதாவது :- இந்தியாவில் அரசர்கள் காலத்திலிருந்தே நிலவரி போன்று பல்வேறு வரிகள் இருந்தாலும், வருமான வரி என்பது அரசர்கள் காலத்தில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது, கடந்த 150 ஆண்டுகளில் தான் வருமான வரி வழக்கத்தில் இருந்து வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 24ம் நாள் வருமான வரி தினமாக கொண்டாடப்படுகின்றது. 1860ம் ஆண்டு ஜூலை மாதம் 24ம் தேதி வருமான வரி வசூலிப்பது என முடிவெடுக்கப்பட்டது. அன்றைய பிரிட்டிஷ் இந்தியா அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் பிரிட்டிஷ்காரர்களிடம் மட்டுமே வருமான வரி வசூலிக்கப்பட்டு வந்தது. பின்னர், அது படிப்படியாகக் குறிப்பிட்ட வரம்பினை விட கூடுதலாக வருமானம் ஈட்டும் அனைவரும் வருமான வரி கட்ட வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது.

இந்திய அரசின் முக்கிய வருமானமாக வருமான வரியே இருக்கின்றது. இதில், கிடைக்கும் வருமானத்தினைக் கொண்டே இந்திய அரசானது பொதுமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. மேலும், சாலை வசதிகள், ஆற்றுப்பாலங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகளுக்கு அரசு செலவிட்டு வருகின்றது. இவ்வாறு முக்கியத்துவம் பெற்ற வருமான வரியை கட்டுவதற்கு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை மாவட்ட வருமான வரித்துறையின் சார்பில் வருமான வரித்தினம் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டும் வருமானவரி தின நாள் விழாவின் ஒரு பகுதியாக உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளியளவிலான மாணவ மாணவிகளுக்காக கட்டுரை எழுதுதல், வண்ணம் தீட்டுதல் போன்ற போட்டிகள் கடந்த 19-ம் தேதி ரேஸ்கோர்ஸ் சாலையிலுள்ள அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்டது. மேலும், நேற்று முன்தினம் வெள்ளலூர் ஏரி கரையில் பல்வேறு வகை மரக்கன்றுகள் நடப்பட்டன. 

அதனைத் தொடர்ந்து, நேற்று வருமான வரித்துறை அலுவலக வளாகத்தில் வருமானவரித்துறை ஊழியர்களும், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் பங்குபெற்ற இரத்ததான முகாம் நடைபெற்றது. இதில், 100-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டார்கள். மேலும், பாப்பநாயக்கன்பாளையத்திலுள்ள மனி மேல்நிலைப்பள்ளியில் உள்ள நானி கலையரங்கில் வருமானவரி விழா நடைபெற்றது. அதுபோலவே, வங்கிகள், காப்பீட்டுத்துறைக்கு அடுத்தாக முழு கணினி மயமாக்கப்பட்ட துறைகளில் வருமான வரித்துறையும் ஒன்று. வரி செலுத்துவோர், தங்கள் கோரிக்கைகள், சான்றுகள், விளக்கங்கள், மற்றும் குறைகளை ஆன்லைனில் பதிவு செய்தாலே போதுமானது. வரி செலுத்துவோரின் குறைகளும் கணினியில் பதிவேற்றம் செய்யப்படுகின்றது. குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் குறைகள் தீர்க்கப்படுகின்றனவா என்று கண்காணிக்கப்படுகின்றது, எனக் கூறினார்.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....