டெல்லி : உலகில் அதிக பறவை இனங்களைக் கொண்ட 2-வது மாபெரும் நகரமான டெல்லியில் பறவைகள் மீட்பு மையம் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

உலகளவில் அதிகளவிலான பறவை இனங்களைக் கொண்ட நகராக நைரோபி திகழ்ந்து வருகிறது. இதற்கு அடுத்தபடியாக, நமது நாட்டின் தலைநகர் டெல்லி உள்ளது. இங்கு சுமார் 450 வகையான பறவைகள் வசித்து வருகின்றன. இப்படி சிறப்பு வாய்ந்த டெல்லியில் தனியாருக்குச் சொந்தமான சிறிய பறவைகள் மீட்பு மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், டெல்லியின் ராஜ்கோரியில் மாநில வனத்துறையினர் சார்பில் முதல் பறவைகள் மீட்பு மையம் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தற்போது, செயல்படாமல் கிடக்கும் 1.2 ஏக்கர் பரப்பளவு கொண்ட குரங்குகள் மறுவாழ்வு மையத்தை பறவைகள் மீட்பு மையமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. வனத்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு பறவைகள் ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.