குன்னூர் அருகே குடியிருப்புகளுக்கு அருகே தாயுடன் கொஞ்சிக் குலாவிய குட்டிக் கரடிகள் : பொதுமக்கள் அச்சம்

நீலகிரி : குன்னூர் அரு‌கே குடியிருப்பு பகுதிகளில் அருகே குட்டிக் கரடிகள் தாயுடன் விளையாடிக் கொண்டிருந்த சம்பவத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி : குன்னூர் அரு‌கே குடியிருப்பு பகுதிகளில் அருகே குட்டிக் கரடிகள் தாயுடன் விளையாடிக் கொண்டிருந்த சம்பவத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதியில் சமீபகாலமாக கரடிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் தேயிலை தோட்டங்களிலும், இரவில் குடியிருப்பு பகுதிகளிலும் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில், குன்னூரிலிருந்து அளக்கரை அரவேணு செல்லும் சாலையில் குட்டிகளுடன் கரடி தேயிலை தோட்டத்திலிருந்து சாலையில் உலா வந்தது. அதனை அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் அச்சத்துடன் படம் எடுத்தனர். இந்த கரடிகள் சாலை மற்றும் குடியிருப்பு பகுதிக்கு மிக அருகில் 30 நிமிடம் வரை குட்டிகளுடன் உலாவி விட்டு பின்னர் மீண்டும் தேயிலை தோட்டத்திற்குள் சென்றது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....